வருமான வரி ஏய்ப்பு ஒரு பக்கம்,  தரக்குறைவான பேச்சு ஒரு பக்கம்

வருமான வரி ஏய்ப்பு ஒரு பக்கம், தரக்குறைவான பேச்சு ஒரு பக்கம்

'நேஷனல் ஹெரால்ட்' பத்திரிக்கை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் அவரது தாயார் சோனியா ஆகியோர் 100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக இருவருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது சம்பந்தமான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து இருவரும் ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும். பின்னர் அந்த அறிக்கையை வருமான வரித்துறை 3 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்." என்று உத்தரவிட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தை குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குறித்தும் பிரதமர் குறித்தும் தரக்குறைவான விதத்தில் விமரிசித்து பேசியுள்ளது, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"நாட்டின் ராணுவ மந்திரி என்ற பொறுப்பில் ஒரு பெண் இருப்பது எவ்வளவு பெருமையான விஷயம். அவரை அவமதிப்பது என்பது நாட்டின் ஒட்டுமொத்த பெண்களையுமே அவமதிப்பதாகும்." என்று கூறியுள்ளார்.