"வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 " - தமிழக முதல்வர் அறிவிப்பு

"வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 " - தமிழக முதல்வர் அறிவிப்பு

பல மாவட்டங்களில் கஜா புயல் தாக்கம், பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு தமிழக அரசு சிறப்பு நிதி உதவியாக தலா ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் அறிவித்தார்.  இந்த அறிவிப்பால் கிராமபுரங்களில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும் என வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழைகே குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவியை பெறுவர்.

இந்த சிறப்பு நிதியுதவி ஆனது வரும் மார்ச் மாதத்திற்குள் 60 லட்சம் பேருக்கும் கிடைக்கும் என முதல்வர் அறிவிப்பு. 

ஏழைகளுக்கு தலா ரூ.2000 என்பதை பா.ம.க நிறுவனர் திரு ராமதாஸ் அவர்கள் வரவேற்ப்பை தெரிவித்துள்ளார்.