வழக்கில் 3 ஆண்டு சிறை - குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ தகுதிநீக்கம்

வழக்கில் 3 ஆண்டு சிறை - குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ தகுதிநீக்கம்

குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பகவான் பரத்துக்கு எதிராக, கிர் சோம்நாத் மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் சட்டவிரோத சுரங்க வழக்கு கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், பரத்துக்கு 2 ஆண்டுகள் மற்றும் 9 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து, மேல்நடவடிக்கைக்காக குஜராத் மாநில சட்டத்துறையால், நீதிமன்ற உத்தரவின் நகல் சட்டப்பேரவைத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலித்துவிட்டு, காங்கிரஸ் எம்எல்ஏ பகவான் பரத்வாஜை அவரது பதவியிலிருந்து சட்டப்பேரவைத் தலைவர் ராஜேந்திர திரிவேதி தகுதிநீக்கம் செய்துள்ளார்.  

அவர் கூறுகையில், "எம்எல்ஏ பதவியிலிருந்து பரத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனிமேல் எம்எல்ஏ கிடையாது' என்றார்.