வாக்களிக்க வாக்காளர் சீட்டை மட்டும் தனியாக இனி பயன்படுத்த முடியாது

வாக்களிக்க வாக்காளர் சீட்டை மட்டும் தனியாக இனி பயன்படுத்த முடியாது

வோட்டர் ஸ்லிப் மட்டும், வாக்களிக்க போதாது என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வோட்டர் ஸ்லிப்புகளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை, ஆதலால் அதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு புகைப்படத்துடன் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள், வங்கிகள் அல்லது தபால் நிலைய கணக்கு புத்தகங்கள், பான் அட்டை, பதிவாளர் ஜெனரலால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அடையாள அட்டை, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்கும்போது கொண்டு வர வேண்டியது அவசியம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.