வாடகைத்தாய் முறை - முறைப்படுத்தப்பட்டது.

வாடகைத்தாய் முறை - முறைப்படுத்தப்பட்டது.

வாடகைத்தாய் முறையை முறைப்படுத்தும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் வாடகைத்தாய்  முறை வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும், உண்மையிலேயே குழந்தை பெற முடியாத தம்பதியினர் மட்டுமே இதனை உபயோகிக்க முடியும் என்றும், இதனால், இந்திய பெண்கள் சுரண்டப்படுவதை தடுக்க முடியும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.  மேலும், தேசிய அளவிலும் மாநில அளவிலும்,  வாடகைத்தாய் மருத்துவ வாரியம் அமைக்கவும் இந்த மசோதா மூலம் வழி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.