வானத்தை எட்டி பிடிக்கும் இந்திய பெண்கள்

வானத்தை எட்டி பிடிக்கும் இந்திய பெண்கள்

உலகளவில் இருக்கும் பெண் விமானிகளை விட இந்தியாவில் தான் பெண் விமானிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இன்டர்நேஷனல் சொசைட்டி ஆப் விமன் ஏர்லைன் பைலட்ஸ்(ISA + 21)என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. 

உலகளவில் பெண் விமானிகள் 5.4% என்ற சதவிகிதத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 12.4%  என்ற சதவிகிதத்தில் பெண் விமானிகள் உள்ளார்கள். உலகில் உள்ள 1.5 லட்சம் விமானிகளில் 8061 பேர் மட்டுமே பெண்கள். ஆனால், இந்தியாவில் உள்ள  8797 விமானிகளில்  1092 பேர் பெண்கள் இவர்களில் 385 பேர் தலைமை விமானிகளாவர்.

ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ. ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா மற்றும் தில்லியை சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான ஜூம் ஆகியவை அதிக அளவிலான பெண் விமானிகளை பணியமர்த்தியுள்ளன.