வாரணாசியில் பிரதமர்

வாரணாசியில் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பயணமானார். அங்கு அவர் பல நல திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், முக்கியமானது உலக வங்கி உதவியுடன் முதல் முதலாக தொடங்கப்பட்டுள்ள உள்நாட்டு நீர் வழி பாதை மற்றும் துறைமுகமும் அடங்கும். கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று கொல்கத்தா துறைமுகத்திலிருந்து பெப்ஸி நிறுவனத்தின் உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு பெட்டக கப்பல் எம்.வி.ரவீந்திரநாத் தாகூர் கங்கை நதியில் பயணம் செய்து  இன்று வாரணாசி வந்தடைந்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். 

இது தவிர இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளையும் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.