வாரணாசியில் பிரதமர் மோடி இன்று மாபெரும் பேரணி

வாரணாசியில் பிரதமர் மோடி இன்று மாபெரும் பேரணி

உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நாளை(ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்கிறார்; இன்று வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் மே 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை(ஏப்.,26) அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று வாரணாசி வரும் மோடி, அங்கு மாபெரும் பேரணியில் கலந்து கொள்கிறார்.

பேரணியில், சாலை வழியாக சென்று, மக்களை சந்திக்கும் மோடி, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதில், பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களும், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்வார் எனவும் பா.ஜ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.