"வாரிசு அரசியல்  மோடி தாக்கு"

"வாரிசு அரசியல் மோடி தாக்கு"

திருப்பூரில் நடந்த பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்கட்சிகளின் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு.  மோடியை எதிர்க்க வேண்டும் என்ற காரணத்தின் உள் அர்த்தம், நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை பின்னுக்கு தள்ளி விட்டு, தங்களின் குடும்பத்தின் வாரிசுகளை அரசியலில் முன் நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எதுவும் கிடையாது.   இன்று பா.ஜ.க. வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தை விட, மோடியை வீழ்த்த வேண்டும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு கிடையாது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்வோம் என்பதை மக்களிடம் எடுத்து கூறுவதை விடுத்தும், ஐம்பதாண்டு காலமாக ஆட்சி செய்த போது என்ன செய்தோம் என்பதை கூறுவதை விடுத்தும்,  மோடியின் மீது தனிநபர் தாக்குதலை மட்டுமே நடத்துக்கிறார்கள்.  இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குவதில் கூட இவர்களிடையே குழப்பமே மிஞ்சியுள்ளது.

          மோடியை எதிர்ப்பர்வர், தங்களது வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் தலைவர்கள்.  சோனியா காந்தி தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களை விட தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா வதேரா, இருவரை மட்டும் முன்னிலைப்படுத்தி வருகிறார்.  இவருடைய போக்கை போலவே, கருணாநிதி தான் தலைவராக வீற்றிருந்த நார்காலியில் தனது மகன் ஸ்டாலினையும், அவருக்கு பின் அவருடைய மகன் உயதநிதி ஸ்டலினையும் முன்னிலைப்படுத்தி வருகிறார்.   தேசிய அளவில் முலயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், பரூக் அப்துல்லா, இறுதியாக உத்தவ் தாக்கரே போன்றவர்கள் தலைமையில் உள்ள அரசியல் கட்சிகள் மோடியை எதிர்க்கிறார்கள்.  இவர்கள் அனைவரும் கட்சியில் குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர்கள்.  கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களை பின்னுக்கு தள்ளி விட்டு, அனுபவமற்ற தனது குடும்பத்தினரின் ஆதிக்கத்தை கொண்டு வருவதில் முதன்மையானவர்கள்.  குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டு மக்களின் நலனில் மட்டுமே அக்கரை கொண்டு செயலாற்றும் மோடியை எதிர்க்கிறார்கள் என்றால், இந்த தலைவர்களும், அவரது வாரிசுகளும் செய்துள்ள ஊழல்களால் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே மோடியை எதிர்கிறார்கள்.  

          காங்கிரஸ் கட்சி -  அரசியல் பின்புலம் உள்ள காங்கிரஸ் கட்சி நேருவுக்கு பின்னர் சில தலைவர்கள் வந்தாலும், இந்திரா காந்தியின்  ஆதிக்க்த்தில் தான் கட்சி கட்டுப்பட்டு வந்தது.    நேருவோ கூட ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட டாண்டனை  மாற்றுவதற்காக தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்ய முன் வந்த கொடுமையும் நடந்துள்ளது.  திட்டமிட்ட ரீதியில் துவக்க காலந்தொட்டு தனது மகன் இந்திரா காந்தியை அரசியலில் ஈடுபடுத்த முனைந்தார், இதற்காகவே வெளிநாடு செல்லும் பொழுதெல்லாம் இந்திராவையும் உடன் அழைத்து சென்றார்.  இந்த செயலுக்கு உடன்படாதவர்களை வெளியேற்ற குள்ள நரித் தனத்தையும் கடைபிடித்தார்.  காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் நேரு பிரதமராக தேர்வு பெற்றதே சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.  1946-ல் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்பதற்காக மனு வாங்கப்பட்டது.  15 பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் , சர்தார் வல்லபாய் பட்டோலுக்கு ஆதரவாக மனு கொடுக்கப்பட்டது.  நேருக்கு ஆதரவாக யாரும் மனு கொடுக்கவில்லை.   மனு கொடுக்க இறுதி நாளுக்கு 9 நாட்களுக்கு முன் காந்தி நேருவின் பெயரை முன் மொழிந்தார்.  29.4.1946-ல் மனுவை பரிசீலிக்க காரிய கமிட்டி கூடியது.  பட்டோலுக்கு ஆதரவான மனுக்கள் இருந்தும் கட்சியின் தலைவராக நேரு எவ்வாறு தேர்வு பெற்றார் என்பதை ஆச்சாரிய கிருபாளனி, 

“ I send a paper round proposing the name of Jawaharlal ( at the instiance of Gandhi, when Gandhi observed no one had proposed Nehru, even though such nomination ( other than by PCC ) was illegal.  It was certain that if Jawaharlal’s name had bot been proposed ,  the Sardar would have been elected as the President…. The Sardar did not like my intervention , I have since wondered kf, as the General Secretay, I should have been instrumental in proposing Jawaharlal’s name in defence to Gandhi’s wishes in the matter… But who can forecast the future?  On such seemingly trivial accidents depends the fate of men and even of nations.”          இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்   இது காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகார போக்கிற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.  இந்த வழியில் வந்தவர்கள் தான் மோடியை பற்றி வாய் கூசாமல்  பாசிஸ்ட் என்றும் சர்வாதிகாரி என்றும் கூச்சல் எழுப்புகிறார்கள்.

          மோடி கூறியவுடன், பரிசுத்தம் ப.சி. ஒரு அறிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் ஆறு நபர்கள் மட்டுமே நேருவின் குடும்பத்தினர் என கூறியது வியப்பளிக்கிறது.  1978 லிருந்து இன்று வரை கட்சியின் தலைவர்கள் யார் என்பதை பார்த்தால் சில உண்மைகள் வெளியே தெரியவரும்.  நாற்பது ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இருவர் மட்டுமே இந்திராவின் குடும்பதை சாராதவர்கள் ஒருவர் பி.வி.நரசிம்ம ராவ் மற்றெருவர் சீத்தராம் கேசரி.  இதில் திருமதி சோனியா காந்தி 1998லிருந்து 2017 வரை காங்கிரஸ் கட்சியின் தலைவியாக வளம் வந்துள்ளார்.  சுமார் 19 வருடங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வீற்றியதற்கு என்ன காரணம் என ப.சி விளக்குவாரா.    மாநில தலைவர்கள் கூட ஜனநாயக முறையில் தேர்வு பெறாமல், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பின்னர் சோனியா காந்தியின் கண் அசைவில் டெல்லியிலிருந்து நியமிக்கப்பட்ட வரலாறு தெரியாமல் பேசுகிறார் ப.சி. அல்லது வரலாற்றை தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக அறிக்கை விடுக்கிறார்.   

          முலாயாம் சிங் யாதவ் –  இவரது தம்பி சிவ்பால் சிங் யாதவ் வலது கரமாக விளங்குபவர்.  இன்றைய நிலையில் முலாயம் குடும்பத்தில் இரண்டு பிரிவுகள் உருவாகியுள்ளன.  ஒன்று முலாயம்சிங் யாதவும் அவரது தம்பி சிவ்பால் யாதவும் ஒரு புறமும், மறுபுறம் முலயாம் சிங்கின் மகன் அகிலேஷ்யாதவ் அவருடன்  ராம் கோபால் யாதவ், மனைவி டிம்பிள் யாதவ் , தர்மேந்திர யாதவ், தேஷ் பிரதாப் யாதவ் கட்சியில் உள்ள முக்கியமானவர்கள்.  இவர்கள் அனைவரும் முலாயம் சிங் குடும்ப உறுப்பினர்கள்.  இவர்களின் நோக்கத்தின் படி கட்சியை காத்த அமீர் சிங் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பல தேர்தலில் இவர்கள் கை காட்டியவர்களே சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினரராக மாறியுள்ளார்கள்.  

          திராவிட முன்னேற்ற கழகம் -  ஒட்டு மொத்த குடும்பத்தின் கையில் கழகம் கட்டுப்பட்டுள்ளது.  திருவாளர் கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் முரசொலி மாறன்.  மாறனின் எண்ணத்திற்கு ஏற்ப கழகத்தை வழி நடத்தியவர் கருணாநிதி.   கருணாநிதிக்கு முன்பே மாறன் மரணமடைந்ததால், ஸ்டாலின் முன்னிலைக்கு வந்தார், இல்லையெனில், மாறன் குடும்பத்தினரின் கைக்கு கழகம் சென்றிருக்கும்.  இந்த கட்சியில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பின்னணியில் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள்.  கனிமொழி கோஷ்டி,  அழகிரி கோஷ்டி, தயாநிதி மாறன் கோஷ்டி, என  பல கோஷ்டிகள் இருக்கின்றன.  ஆனால் அத்தனை கோஷ்டிகளும் கருணாநிதியின் குடும்பத்தின் ஆட்களே தவிர வேறு ஒருவரும் கிடையாது.  கட்சி துவக்கப்பட்டதிலிருந்து , தி.மு.க.வின் சொத்துக்கள் பராமரிப்பு குழுவில் கூட தனது குடும்பத்தின் உறுப்பினர்களின் அதிகாராம் மேலோங்கி யிருக்கும் விதமாகவே அமைத்தார்.  70 வருட கட்சியில் அண்ணாதுரைக்கு பின்னர் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே எல்லா பதவிகளையும் அனுபவித்து வருகிறது.  கருணாநிதி முதல்வராக இருந்த போது துணை முதல்வர் ஸ்டாலின், ஐம்பதாண்டு காலம் உடன் இருந்த அன்பழகனுக்கு கொடுக்கப்படவில்லை.   ஸ்டாலினுக்கு பின்னர் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கட்சி தலைவராக வருவார் எனவும், இனிமேல் கட்சியில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வைத்தது தான் சட்டம் என்றும் கூறப்படுகிறது.  ஆகவே தி.மு.க. முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தின் கட்சியாகும்.  கட்சியின் தொண்டர்கள் என்பவர் அடிமைகளாக பார்க்கபடுகிறார்கள்.

          ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடு, என்.டி ராமராவ் மரணமடைந்தவுடன், தெலுங்கு தேச கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார் .  தற்போது தனக்கு பின்னர் தனது மகன் ரமேஷ் நாயுடு தலைவராக கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே சட்ட மன்ற உறுப்பினராக்கி அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.   என்.டி. ராமராவ் மகன் பாலகிருஷ்ணா ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.  முதலில் ராமராவ் மகன்களை சந்திரபாபு நாயுடுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் இருவரும் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து குடும்ப கட்சியாகவே மாற்றிவிட்டார்கள்.    டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தனது மகள் கவிதாவை தனக்கு பின் அடுத்த வாரிசாக அறிவிக்காத குறையாக செயல்பட்டு வருகிறார்.  காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய  ஜெகன் ரெட்டியும் ராஜசேகரராவின் மகன் என்பதையும் மறந்து விடக் கூடாது.

          பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும், குற்றச்சாட்டுகளுக்கு மேல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோடியை விமர்சனம் செய்து வருபவர்கள் சிவசேன கட்சியினர்.  பால் தாக்கரேவிற்கு பின்னர், கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும் தனது மகன் உத்தவ் தாக்கரேவிடம்  கட்சியை ஒப்படைத்துள்ளார்.   சிவசேனாவிலிருந்து தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக வெளியேறி தனி கட்சி துவங்கியுள்ளார் ராஜ் தாக்கரே.   

          பகுஜன் சமாஸ்வாதி கட்சியின் தலைவி மாயாவதி, கன்ஷிராமுடன் இணைந்து பணியாற்றி, பின்னர் கட்சியை கைப்பற்றியவர்.  கன்ஷராம் உயிருடன் இருந்த போது கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியவர் ஜெய் பிரகாஷ் சிங் என்பவர்.  ராகுல் காந்தி பிரதமராக வர இயலாது என கூறியதால், கட்சி கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என கூறி கட்சியிலிருந்து வெளியேற்றினார் மாயாவதி.  ஒரு ஜனநாயக நாட்டில் தன்னை ஒரு ஜனநாயக வாதியாக காட்சி தரும் மாயாவதி, தனக்கு பின் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்பதற்காக  ஒருவரின் பெயரை குறிப்பிட்டு எழுதி அந்த கவரை தனக்கு   நெருக்கமான இருவரிடம் கொடுத்து, தான் இறந்த பின்னர் அறிவிக்க வேண்டும் என்றவர் தான் மோடியை பற்றிய விமர்சனத்தை முன் வைக்கிறார்.  இதில் எழுதப்பட்டுள்ள பெயர் தனது உறவினர் என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.  பகுஜன் சமாஸ்வாதி கட்சியில் மாயாவதியின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிக அளவில் உள்ளது என்பதை கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் ஏராளமானது.

          தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவும், லன்டனில் படித்துக் கொண்டிருக்கும் போதே, தனது தந்தை ஷேக் அப்துல்லாவின் மறைவுக்கு பின்னர் அரசியலில் ஈடுபட்டார்,  காஷ்மீரில் அரசியல் வரலாற்றில் ஷேக் அப்துல்லாவின் குடும்ப ஆதிக்கமே இன்று வரை உள்ளது.   பரூக் அப்துல்லாவிற்கு பின்னர் அவரது மகன் ஓமர் அப்துல்லாவும், இவர்களுக்கு போட்டியாக கட்சி நடத்தும் மெகபூபா சயீத் , தனது தந்தை முப்தி முகமது சயீத்தின் மகள்.  எனவே காஷ்மீரில் கூட ஆளும் கட்சியிலும்  எதிர் கட்சியிலும் குடும்ப ஆதிக்கமே உள்ளது.

 இவ்வாறு குடும்ப அரசியலில் முன்னிலையில் உள்ளவர்கள் தான் மோடியை எதிர்க்க ஒரு அணியில் சேர்ந்துள்ளார்கள். 

- ஈரோடு சரவணன்.