வாழை தென்னை கன்றுகள் இலவசம்

வாழை தென்னை கன்றுகள் இலவசம்

கடந்த 12 நாட்களுக்கு முன் தமிழகத்தை தாக்கிய 'கஜா' புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ளன. நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த மா, தென்னை, வாழை மரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

இதனால், தமிழக அரசு டெல்டா விவசாயிகளுக்கு வாழை,  தென்னை கன்றுகளை இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. அவர்களது விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும் ஆலோசித்து வருகிறது.