விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்தது ஏன்?

விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்தது ஏன்?

தேமுதிக தலைவர் விஜயகாந்தை 2 நாட்கள் முன்பு பியூஸ் கோயல் சந்தித்தார், நேற்று திருநாவுக்கரசரும் சந்தித்தார்.  இன்று காலை ரஜினி சந்தித்த பரபரப்பு அடங்கும் முன்பு, ஸ்டாலின் சந்தித்து விட்டு போனார்.

ஊடகங்களை உச்சக்கட்ட பரபரப்பில் ஆழ்த்துவதில் விஜயகாந்த் கில்லாடி. இன்றைக்கு அவர் தான் Talk of the Town. ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்ததன் காரணங்கள் என்னென்ன?

1. இன்று மதுரையில் அமித் ஷா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்த சமயம், அதிமுக தலைவர்களுடன் நேரடியாக பேசி, விஜயகாந்துக்கு சற்று விட்டுக்கொடுக்கும்படி வலியுறுத்துவது அவர் எண்ணம். அது நடந்துவிட்டால், தேமுதிக பாஜக பக்கம் சென்று விடும் என்கிற பயம் 

2. ரஜினிகாந்த் நட்புரீதியாக பார்க்கப்போக, பாஜகவின் தூதுவர் என்ற பயத்தில், கூட்டணியை தடுக்கும் பொருட்டு, ஸ்டாலின் திடீர் விஜயம் செய்தார்.

3. இன்னொரு விஷயம், தொகுதிகள் விஷயத்தில் முரண்டு பிடிக்கும் விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளை, கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.  விஜயகாந்த் வந்து விட்டால், திமுகவுக்கு சிறிய கட்சிகளின் தயவு தேவை இல்லை. அவ்வாறான நிலையில், திமுக கொடுக்கும் சீட்டை , பெறுவதை தவிர்த்து அவர்களுக்கு வேறு வழி இல்லை.

இவைகளையெல்லாம் கணக்கு செய்தே அவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார்.

தேமுதிக என்ன முடிவு செய்துள்ளார்கள் என்பது குடும்பத்தினரை தாண்டி யாருக்குமே தெரியாது, ஆனால் திமுக அந்த கட்சியை சேர்க்க யோசிக்கிறது.  காரணம், துவண்டுபோன தேமுதிக வுக்கு உயிர்க்கொடுத்து,  2021ல் சவாலை சந்திக்க ஸ்டாலின் விரும்பவில்லை, மற்றொன்று தேமுதிக 2 அல்லது 3 இடங்களில் வெற்றி பெற்றாலும், பின்னர் பாஜகவுடன் போய் விட வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக விஜயகாந்த் வேண்டாம் என திமுக கருதுவாகவே தெரிகிறது. கூட்டணி கட்சிகளை பணிய வைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.