விநாயகர் சதுர்த்தி அன்று கலவரத்தை ஏற்படுத்த சதி நடக்கிறதா ?  புழல் ஜெயில் பக்கம்..!! கேட்டது ஒரு சத்தம் !!.

விநாயகர் சதுர்த்தி அன்று கலவரத்தை ஏற்படுத்த சதி நடக்கிறதா ? புழல் ஜெயில் பக்கம்..!! கேட்டது ஒரு சத்தம் !!.

கடந்த, 2013-இல் இந்து இயக்க தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதிகள் ‘போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது குறித்து அவர்களிடம் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் விசாரிக்க சென்றார். 

அப்போது ஆத்திரம் அடைந்த பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவரும் சூப்பிரண்டு செந்தில்குமாரை கீழே தள்ளி அடித்து உதைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடமிருந்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரை காப்பாற்றியுள்ளனர். 

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

குண்டு வைத்தல், கொலை செய்தல் போன்ற கடும் குற்றங்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் புழல் சிறையில் சுகபோகமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதேபோல அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அந்த அளவிற்கு அவர்களின் அராஜகமும், அட்டகாசமும் கொடிகட்டி பறந்துள்ளது.

செல்போன் பயன்படுத்துவது, ஆடம்பர கட்டில் மெத்தையில் தூங்குவது, பிரியாணி சமைத்து உண்பது போன்றவை சர்வ சாதாரணமாக அரங்கேறி வந்துள்ளன. கடந்த ஆண்டுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது. 

இந்த நிலையில்தான் முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்பட அட்டூழியத்தில் ஈடுபடும் கைதிகளின் கொட்டத்தை அடக்கும் நடவடிக்கைகளை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தீவிரமாக மேற்கொண்டார். 

இது முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது வன்மத்தை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான் செந்தில்குமார் தாக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்து இயக்க தலைவர்கள் பலரை கொலை செய்த இந்த முஸ்லிம் பயங்கரவாதிகள், சிறைச்சாலையை ஒரு திருந்தும் இடமாக பயன்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தும் களமாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், முஸ்லிம் பயங்கரவாதிகளை சில முஸ்லிம்கள் மதத்தின் பெயரால் ஆதரிப்பதும், அவர்களுக்கு உதவி செய்வதும்தான். 

“இந்திய தேசிய லீக் கட்சி” என்ற முஸ்லிம் மதவெறி அமைப்பு, நேரடியாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு அதரவு கரம் நீட்டி வருகிறது.

இந்திய தேசிய லீக் கட்சி, வருகிற 2-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று சிறையில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக “புழல் சிறை முற்றுகை போராட்டம்” அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் என்பது தெரிகிறது. அதற்கு புழல் சிறை முற்றுகை போராட்டம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு விநாயகர் சதுர்த்தி தினத்தை தேர்வு செய்ததும் அவர்களின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அன்று மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய லீக் கட்சி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, தொடந்து மத வெறியை தூண்டி அமைதியை சீர்குலைத்து வரும் தேசிய லீக் கட்சியை தடை செய்ய வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் சமூக ஆர்வலர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.