விமானப்படை விங் கமான்டர் அபிநந்தன்

விமானப்படை விங் கமான்டர் அபிநந்தன்

விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் விடுவிப்பு

              ஏதே பாகிஸ்தான் நலலெண்ணத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்கள் கருத்துக்களை  வைக்கிறார்கள்.  திருமதி குஷ்பு ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து நமது பாரத பிரதமர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை நிகழ்த்துகிறார்.  உண்மையை மறைத்து நாடகமாடுகிறார்கள்.  அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா கோரவில்லை என்பதும், 1949-ல் ஜெனிவா உடன்பாட்டின் படி நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே வைத்தது.  ஆனால் இம்ரான் கான் விடுவிக்க எடுத்த நடவடிக்கையின் பின்னால் பல உண்மைகள் புதிந்துள்ளன.  வெளிநாட்டு தூதர்களிடம், இந்தியா சில விஷயங்களை தெளிவுப்படுத்திய பின்னர், இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை பார்த்து, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பாக்கிஸ்தானை வற்புறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த பின்னர் பாகிஸ்தான் அபிநந்தனை விடுவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டதை, இந்திய ஊடகங்கள் முடி மறைக்க முயலுகின்றன.  

          உலக அளவில் நிர்பந்தம் ஏற்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.  சீனா தடுத்த போதும், 15 நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை, தடுக்க இயலாமல் பின்னர் ஆதரவாக வாக்களித்தது சீனா.  இதுவே பாகிஸ்தானு்ககு கிடைத்த மிகப் பெரிய தோல்வி என்பதும்,  அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியும், தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாகவும், அபிநந்தன் விடுதலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

          புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், இந்திய அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும் முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை காங்கிரஸ் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை.  சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி, அனுப்பபடும் நீரின் அளவை குறைத்தது,  இதன் காரணமாக 6 சதவீத நீரை திருப்பினால், பாகிஸ்தானின் விவசாயத்தில் கனிசமான அளவு உற்பத்தி குறைந்து விடும்.  பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிப்பு,  பாகிஸ்தானிலிருந்து  அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் வெங்காயம் , சிமென்ட் முக்கியமான பொருளாகும். சிமென்ட் வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம், ஆனால் வெங்காயம்  இந்தியாவை தவிர வேறு நாடுகள் வாங்க இயலாது.   இதன் காரணமாக பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே இம்ரான் கான் எடுத்த முடிவாகும்.  

          இம்ரான் கானுக்கு ஆதரவாக பேசும் ஊடகங்களும், சில தேச பக்தியில்லாத அரசியல் தலைவர்களும் சில சம்பவங்களை மறந்து விட்டு வாதம் செய்கிறார்கள்.  இம்ரான் கான் பதவிக்கு வந்த பின்னர் பல முறை பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறியுள்ளது.   இந்திய பகுதியில் துப்பாக்கி சூடும் நடத்தியது.  இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அறிவித்த இம்ரான் கான் எப்பொழுதாவது, எல்லை மீறும் பாகிஸ்தான் படையை தடுக்க நடவடிக்கை எடுத்தாரா என்பதை வக்கலாத்து வாங்கும் அரசியல் தலைவர்கள் விளக்க வேண்டும்.   உலக நாடுகளின் நிர்பந்தம்,  உலக வங்கியில் கடன்  கொடுக்க மறுப்பு, தனது எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்  பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பது, பலூசிஸ்தான் கலவரம் நடக்க தயாராக இருப்பது போன்ற காரணங்கள் என்பதை மறந்து விடக் கூடாது.  இதுவே அபிநந்தன் விடுதலைக்கு காரணமாக அமைந்த கருவாகும்.

இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் தேச துரோகிகள்

             பிப்ரவரி மாதம் 14ந் தேதி புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது  என்ற பயங்கரவாத அமைப்பு தற்கொலை தாக்குதலை நடத்தி, இந்திய வீரர்கள் 44 பேர்களை கொன்ற சம்வத்திற்கு , வருத்தம் தெரிவிக்காதவர்கள்,  பிப்ரவரி 26ந் தேதி இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு , தேச துரோகிகளாக மாறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கேள்வி  கணைகளை தொடுத்துள்ளார்கள்.  இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்கள். 

          மே 17 இயக்கத்தைச் சார்ந்த டேனியல் என்ற திருமுருகன் காந்தி, பாகிஸ்தான் தாக்குதல் சம்பந்தமாக பி.பி.சி. என்ன கூறியதோ அதையே வாந்தி எடுத்தது போல் பேசியுள்ளான்.  அதிமோதவியாக கரு்திக் கொண்டு,  ஐ.நா.சபையில் கூறி, பாகிஸ்தான் மீது பொருளாதார தடை கொண்டு வந்திருக்க வேண்டும் என கூறியது, காஷ்மீர் பற்றிய முழு உண்மையும் தெரியாமல் பேசுவதாகும். . மசூத் அஸார் பயங்கரவாத என்பதை ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரும் போதெல்லாம், சீனா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தியதை திருமுருகன் காந்திக்கு நினைவில்லை.  இதற்கு தமிழக ஊடகங்கள் பெரிய முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.    புல்வாமா தாக்குதலுக்கு கன்டனம் தெரிவிக்காத தமிழக தலைவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை.  தொலைக்காட்சியில் விவாதம் நடத்திய போது, முன்னாள் ராணுவ அதிகாரி கூறியது முக்கியமானது, விவாத மேடையில் தேச விரோத சக்திகளை கொண்டு விவாதம் நடத்துவது கேவலமானது என்றார்.  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வாய் கிழிய கூச்சல் போட்டவர்கள், தமிழகத்தில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்ட போது ஏன் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. 

          கோவையில் கூடிய வலதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினரின்  தமிழகம் காப்போம், என்ற பெயரில நடத்திய அரசியல் எழுச்சி மாநாட்டில், காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்பதே மோசடி தீர்மானமாகும்.  ஐம்பதாண்டு காலமாக பேச்சு வார்த்தை நடத்தியதும், சிம்லா உடன்பாடிக்கையை  அமுல் நடத்த வேண்டிய பாகிஸ்தான் ஏன் நடத்த வில்லை என்ற கேள்வியை கேட்காமல்,  தீர்மானம் மட்டும் போடுவது சரியானதா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  காரணம் பிரிவினைவாதியின் வீட்டுக் கதவை தட்டிய ராஜாவின் எண்ணத்தின் படியே போடப்பட்டுள்ள தீர்மானம்.  காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளின் குடும்பம் அனைத்தும் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளது என்பதை இவர்கள் எப்பொழுதாவது சுட்டிக் காட்டியிருப்பார்களா என்பதும் சந்தேகம்.  

 பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நிதி, ஆயுத உதவி, பயிற்சி அளிக்கும் கேவலமான நிலையை தடுக்க ஏன் பாகிஸ்தான் முன் வர வில்லை என்ற கேள்வியை எழுப்பாத காம்ரேட்டுகள், எந்த வகையில் அரசியல் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.   கேரள இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், பாம்புக்கு பால் வார்ப்பது போல்,  தேர்தல் தேதியை அறிவிக்கும் முன், போர்ச் சூழலை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வருகிறது.  இதன் மூலம் தேர்தலை நாசப்படுத்த  எண்ணுகிறது.  மக்களவைத் தேர்தலில் தனது முடிவை பா.ஜ.க. ஊகித்து விட்டது.  இதன் மூலம் அவசர நிலையை அமுல்படுத்தி தேர்தலை நிறுத்த முயல்கிறது.   என ஓப்பாரி வைத்துள்ளார்.  இந்த ஒப்பாரியுடன், காஷ்மீர் விவகாரத்தை போராக மாற்ற பா.ஜ.க.முயற்சிக்கிறது.  இதனை பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பைப் பரப்ப பயன்படுத்திக் கொள்கிறது என பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கிறார்.  இந்த தேச துரோகிகள் எப்பொழுதாவது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கம் சீனாவைப் பற்றி விமர்சனம் செய்வார்களா ?  அல்லது சீனாவை தான் கேள்வி கேட்பார்களா ? 

          ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமில்லாமல், போராட்டத்தை முன் நிறுத்தி மோடியை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை தற்போது  தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  சினிமாவை மூலதனமாக்கி, வக்கிர புத்தியை புகுத்தியவர்கள், 44 பேர்கள் கொல்லப்பட்ட போதும், விமான படையின் தாக்குதலின் போதும், வாய் திறக்காத தேச துரோகிகள் என்பதை மறந்து விடக் கூடாது.   புல்வாமா தாக்குதலின் போது மு்ஸ்லீம் வீரர் கொல்லப்பட்டதற்கு முதலை கண்ணீர் வடிக்கும் வை.கோ, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த கூடாது என்கிறார்.  பிரபாகரனை முன் நிறுத்தி, இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டு கத்தல் நடத்திய வை.கோ.  இஸ்லாமியர்களை வைத்து இந்தியாவை துண்டாட தூண்டும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என கூறுவது தேச துரோகமாகும்.

          தாக்குதலுக்கு விமான படையை மட்டும் பாராட்டும் எதிர் கட்சிகள் -  26 பிப்ரவரி நடத்திய தாக்குதலுக்கு , காங்கிரஸ் உள்ளிட்ட மகாகட்பந்தன் கட்சிகள் , தாக்குதல் நடத்திய விமானப் படை வீரர்களை மட்டுமே பாராட்டிவிட்டு, உத்திரவிட்ட மோடி அரசங்கத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை.   ராணுவத்தினர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க இயலாது என்பது தெரிந்தும், அரசியல் சூழ்நிலைக்காக மோடியை பாராட்ட தயக்கம் காட்டுகிறார்கள்.  மும்பை குண்டு வெடிப்பின் போது, பாகிஸ்தானை தாக்க விமான படை தயாராக இருந்தும், பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கவில்லை என முன்னாள் விமானப் படை தளபதி கூறியதற்கு பதில் கூற காங்கிரஸ் கட்சி தயாராகயில்லை.  1971-ல் கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களா தேஷ் நாட்டை உருவாக்கிய போது, ராணுவத்தை பாராட்டாமல், இந்திரா காந்தியை வானலாவ புகழ்ந்து தள்ளியவர்கள், மோடிக்கு அந்த பெருமையை கொடுக்க மறுக்கிறார்கள்.  

          தமிழகத்தில் இலங்கை பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்த தி.மு.க. மற்றும் திராவிட இயக்கங்கள் மோடியை பார்த்து அரசியலாக்க கூடாது என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.  இலங்கை பிரச்சினையில் கொழும்பு சென்ற இவர்கள் ஏன், பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலாக தாக்க வேண்டும் என்ற குரல் எழுப்பினார்கள்.  சட்ட மன்ற தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களாக காட்டிக் கொண்டவர்கள், மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்து போது ஏன் நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்கவில்லை.  இது அரசியல் விளையாட்டு இல்லையா?  தி.மு.க. ஆடலாம், மற்றவர்கள் ஆடினால் கண்டனம் தெரிவிப்பது தான் சர்வாதிகாரம் என்பது.

          பாராட்ட வேண்டிய ஊடகம்தொடர்ந்து இடதுசாரிகளின் கருத்துக்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த ஹிந்து பத்திரிக்கையின் தமிழ் இதழில், 26ந் தேதி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கொடுத்துள்ள விதம் மிகம் பாராட்ட தக்க  ஒன்றாகும்.  ஏன் என்றால் எதிர்கட்சிகள் முதல், ஊடகங்கள் வரை விமான படையை மட்டுமே பாராட்டி, மத்திய அரசைப் பற்றி தகவல்களை மூடி மறைத்துள்ளார்கள்.  இதற்கு மாறாக  பிரதம மந்திரியின் துணிச்சாலான நடவடிக்கை, அவரின் ராஜதந்திரம் பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளார்கள். 

          இவ்வாறு துணிச்சலான செய்தியை வெளியிட்டதை பாராட்டுகின்ற அதே சமயம், ராணுவத்தில் மத பிளவை ஏற்படுத்தும் விதமாக கேரவான் பத்திரிக்கையில் வெறி பிடித்த அஜாஸ் அஷ்ரஃப் என்ற பத்திரிக்கையாளர், புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களில் யார் எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என சர்வே எடுத்தது,  ஹிந்துத்துவிற்கு எதிராக கட்டுரை எழுத முற்பட்ட இந்த பிற்போக்குவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஈனத்தனமான ஊடகங்களும் உண்டு என்பதை இந்த தருனத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.

          சமூகத்தையும், அரசியலையும் சாக்கடையாக்கிய சாதி பற்றுக் கொண்ட பத்திரிக்கையாளர்கள் தற்போது ராணுவத்திலும் சாதியை தொடுவது, உயிர் தியாகம் செய்த வீரனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்.  இந்த செயலை துவக்கித்திலேயே வேரரூக்க வேண்டும். 

- ஈரோடு சரவணன்.