விரக்தியில்   குமாரசாமி

விரக்தியில் குமாரசாமி

கர்நாடகாவில் பெரும்பான்மை கிடைக்காத மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைத்ததிலிருந்தே தினம் தினம் புது புது பிரச்சனைகளால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் முதலமைச்சர் குமாரசாமி. இன்றைய பிரச்சனையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், "இப்போதும் எங்களுக்கு முன்னாள் முதல்வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தான் முதலமைச்சர். எந்த பிரச்சனை ஆனாலும் அவரிடம் தான் நாங்கள் சொல்கிறோம்." என்று கூறியிருப்பது குமாரசாமியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் குமாரசாமி,"காங்கிரஸார் எல்லை மீறுகிறார்கள். இதே போல் தொடர்ந்தால் நான் பதவி விலகிக்கொள்கிறேன்." என்று  விரக்தியுடன் கூறியுள்ளார்.