விரக்தியில் திமுக மூத்த தலைவர்கள்

விரக்தியில் திமுக மூத்த தலைவர்கள்

தலைவர் கலைஞர் இருந்தவரை மிகப்பெரிய சக்தியாக இருந்த திமுக, ஸ்டாலின் தலைமையேற்றவுடன் பலவீனப்பட்டு வருவதாகவும், குடும்பத்தின் ஆதிக்கம் ஓங்கி வருவதாகவும் கருதுகிறார்கள்.

அரசியலில் Waiting Game ரொம்ப முக்கியம், அதை பயன்படுத்தி பாமக அதிமுக கூட்டணியில் 7 சீட்கள் பெற்றது. அதே விளையாட்டை ஆடி அதிமுக, பாஜக வுக்கு 5 சீட்கள் மட்டும் கொடுத்துள்ளது. விஜயகாந்தும் கூட்டணி குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்லாமல், பொறுமை காக்கிறார்.   ஒரு கட்சி மவுனம் காக்கும்போது, கூட்டணிக்கு விரும்பும் கட்சி, கேட்டதை ஒப்புக்கொள்ளும்.

ஆனால் ஸ்டாலின் ராகுல் தான் அடுத்த பிரதமர் என்று சொல்லிவிட்டார், இவரே வலிய சென்று கூட்டணி அமைத்துவிட்டார்.  இதற்கு முன்பு வரை, காங்கிரஸ் தலைவர்கள் அறிவாலயம் வந்து கூட்டணி பேச்சு நடத்துவார்கள், ஆனால் இப்போது திமுக டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

3 மாநிலங்களில் வெற்றி பெற்றாலும், பல கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியை உதறிவிட்டன.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் பிடிகொடுக்காமல் பேசி இருக்கலாம், ஆனால் சரண்டர் ஆகிவிட்டது என்கிறார்கள்.

அதே போல ஸ்டாலின், உதயநிதி, சபரிசன், கனிமொழி, செல்வி இவர்கள் power centre ஆக இருக்கிறார்கள். இவர்கள் நினைப்பதே நடக்கிறது, மூத்த தலைவர்களை ஆலோசிப்பது இல்லை. தலைவருக்காக (கலைஞர்) இந்த தேர்தலில் மட்டும் வேலை செய்வோம், அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் என்பது இவர்கள் எண்ணமாக உள்ளது.

கொசுறு செய்தி 1
நமக்கு அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது, தொழிலில் மட்டும் கவனம் செலுத்துவோம்  என்று மாறன் குடும்பம் முடிவெடுத்துள்ளதாம். எனவே தயாநிதி மாறன் போட்டியிடமாட்டார் என்று தெரிகிறது.