விராட் கோலி அசத்தல்

விராட் கோலி அசத்தல்

2018ம் ஆண்டுக்கான ஐ.சி.சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என்ற 3 விருதுகளை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெறுகிறார். ஐ.சி.சி விருது வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று விருதுகளையும் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.