விரைவில் தமிழக பாஜக தலைவர் தேர்வு

விரைவில் தமிழக பாஜக தலைவர் தேர்வு

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தமிழகத்திற்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணியில் பாரதிய ஜனதா மேலிடம் ஈடுபட்டுள்ளது.இந்த நிலையில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறுகையில், தேசிய தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக பாஜக தலைவர் மிக விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்றார்.