விளம்பரம் இல்லா சேவை - ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரின் ரத்ததான செயலி

விளம்பரம் இல்லா சேவை - ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரின் ரத்ததான செயலி

இரத்தம் மனித உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மனித இரத்தம் விலை மதிப்பில்லாதது. அதனால் தான் ஒருவருக்கு இரத்தம் கொடுப்பதை தானம் என்று சொல்கின்றோம். உயிர்களைக் காக்கும் இரத்தம் எல்லோருக்கும் தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.எஸ்.எஸ். மூலம் ஆரம்பிக்கப்பட்ட செயலி (மொபைல் ஆப்) தான் RSS HSS Blood Donors Bureau App.

கடந்த 2017 சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் நிறைந்த அரங்கில் செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டு சென்னையில் உள்ள பலரும் ஆர்வமாக தங்களை இரத்த தானியாக பதிவு செய்து கொண்டு, பலருக்கும் சரியான நேரத்தில் இரத்த தானம் செய்துள்ளனர். இதுவரை 4278 பேர்கள் தங்களை இரத்த தானிகள் என்று பதிவு செய்துள்ளனர். 2104 இரத்தம் தேவை என்று பதிவு செய்யப்பட்டு இரத்தம் பெற்றுள்ளனர். இதுவரை 986 பேர்கள் 47 மருத்துவமனைகள் மூலம் இரத்த தானம் செய்துள்ளனர். எவ்வித விளம்பரமும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். செய்துவரும் சிறந்த சேவைகளில் இதுவும் ஒன்று. இந்த ஆண்டு வரும் ஜூன் 14 உலக இரத்த தானிகள் தினத்தன்று சென்னை முழுவதும் ஒரு பெரும் நிகழ்வாக செயலி மூலம் 14000 பேர்களை இணைக்க முயற்சி செய்யப்பட உள்ளது.