விளையாட்டுச்செய்திகள் (11.01.2019)

விளையாட்டுச்செய்திகள் (11.01.2019)

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் குன்னேஷ்வரன் பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

*2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்க்கேற்றுக்கும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பீரேந்திர பிரசாத் பைசியா தலைமை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பளுத்தூக்கும் வீரருக்கு இத்தகைய கெளரவம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

*பிரீமியர் பாட்மிட்டன் லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று பெங்களூருவில் துவங்குகின்றன.

*சென்னையில் நடைபெற்று வரும் தேசிய ஹாக்கி சாம்பியன் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழக அணி அஸ்ஸாம் அணியை 13 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது.

*நேற்று முன் தினம் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை சந்திக்க 87 வயதான அவரது ரசிகை எடித் நார்மன் சிட்னி மைதானத்திற்கு வந்தார். இதனை அறிந்த தோனி தனது பயிற்சியை நிறுத்திவிட்டு அவரை சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

*உலக குத்துச்சண்டை தர வரிசையில் இந்தியாவின் மேரி கோம் முதலிடத்தை பிடித்துள்ளார்.