விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

*உலக பாட்மிட்டன் இறுதி சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

* புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி போட்டியில் பெல்ஜியம் இங்கிலாந்தையும் ஆஸ்திரேலியா  நெதர்லாந்தையும் எதிர்கொள்கின்றன.

*ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸில் சற்று முன் வரை  3 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது.

*வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில்  இந்தியா வெற்றி பெற 271 ரன்கள் என்ற இலக்கை இலங்கை அணி நிர்ணைத்துள்ளது.

*ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

*ப்ரோ கபடி லீக் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டங்களில் தமிழக அணி உத்திரப்ரதேச அணியையும் மும்பை அணி ஜெய்பூர் அணியையும் எதிர்கொள்கின்றன.