விவசாயிகளுக்கு உயிர் கொடுக்கும் பாஜக தேர்தல் அறிக்கை - ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு உயிர் கொடுக்கும் பாஜக தேர்தல் அறிக்கை - ஜி.கே.வாசன்

இந்திய வரலாற்றில் முக்கியமான தேர்தல் இந்த மக்களவைத் தேர்தல். இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்கவேண்டும் என்றால், பிரதமராக மோடி தலைமையிலான அரசு இருக்கவேண்டும். ஒத்த கருத்துடைய கூட்டணி அதிமுக கூட்டணி, அதிமுக அரசின் திட்டங்கள் குக்கிராமங்கள் தோறும் சென்றடைகின்றன. பாஜக தேர்தல் அறிக்கை ஏழை, எளிய விவசாயிகளுக்கு உயிர் கொடுக்கும் அறிக்கையாகும். திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏழை, எளியோரை ஏமாற்றும் அறிக்கையாகும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ. ஏழுமலையை ஆதரித்து, போளூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு திறந்த வேனில் நின்றபடி ஜி.கே. வாசன் பேசினார்.