விவேகானந்தர் குறும்படப்போட்டி அறிவிப்பு

விவேகானந்தர் குறும்படப்போட்டி அறிவிப்பு

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் சொற்பொழிவாற்றிய 125வது ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம் குறும்பட போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 

எல்லையில்லா இளமை சக்தி, இன்றைய இந்தியாவிற்கு தேவையான தேச பக்தி, பாரத பெண்களின் ஆன்ம பலம், பாரதம் காட்டும் உலக சமாதானம், எல்லா சிந்தனைகளையும் ஏற்றுக்கொள் ஆனால், உன் தனித்தன்மையுடன் ஞானம் பெறு, இயற்கையை போற்றுவதும் பாதுகாப்பதும் இறையம்சமே ஆகிய தலைப்புகளில் குறும்படம் எடுத்து அனுப்பலாம்.

வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய், இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக 60 ஆயிரம் ரூபாய், ஆறுதல் பரிசாக 15பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்பதற்கான வயது வரம்பு முதலிய விதிமுறைகளை 63742-13060, 63742-13050, 94980-91326 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

குறும்படங்களை அனுப்ப பிப்ரவர் 15ம் தேதி கடைசி நாளாகும்.