வீரமணியை கண்டித்து வீடுவீடாக பிரசாரம் செய்வோம் - ஹிந்து மக்கள் கட்சி

வீரமணியை கண்டித்து வீடுவீடாக பிரசாரம் செய்வோம் - ஹிந்து மக்கள் கட்சி

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி அமைப்பினர் நேற்று எஸ்.பி.,சக்திவேலிடம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணர் வேடமிட்ட சிறுவனுடன் வந்து புகார் அளித்தனர். 

பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு முன்னோடி கிருஷ்ணர்' என தி.க., தலைவர் வீரமணி கூறினார். இதையடுத்து 'இந்து கடவுள்கள் குறித்து தொடர்ந்து அவதுாறாக பேசி வரும் வீரமணியை கண்டித்தும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கு எதிராகவும் வீடுதோறும் பிரசாரம் செய்வோம்' என, இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பகவான் கிருஷ்ணரை அவமதித்து இந்து மத நம்பிக்கையையும், கலாசாரத்தையும் வீரமணி இழிவுபடுத்தியுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், மத கலவரத்தை துாண்டும் அளவிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் வீரமணி மீது ஜாமினில் வெளிவராத பிரிவின் கீழ் வழக்கு பதிய வேண்டும்.போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். வீரமணியை சேர்த்து வைத்திருக்கும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அவரை விலக்கி வைக்க வேண்டும். இல்லையேல் இந்துக்கள் வீடுகளில் வீரமணியை கண்டித்தும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கு எதிராகவும் பிரசாரம் செய்ய உள்ளோம், என்றார் இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் ரவிபாலன் கூறினார்.