'வீரம் மிக்க போர் வீரனின் தந்தை என்பதில் பெருமை!'

'வீரம் மிக்க போர் வீரனின் தந்தை என்பதில் பெருமை!'

என் மகன், அபிநந்தனின் வீரமிக்க செயலால், மிகவும் பெருமை கொள்கிறேன். அவர், பாக்., ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட போதிலும், எவ்வித பயமும் இல்லாமல் துணிச்சலுடன், ஒரு உண்மையான போர் வீரன் என்பதை நிரூபித்துள்ளார். அவரது செயல் பாராட்டுக்குரியது. வீரமிக்க, ஒரு போர் வீரனின் தந்தை என்பதில் பெருமை.

நானும் உங்களைப் போல, அபிநந்தன் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என, இறைவனை வேண்டுகிறேன். எங்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்த, அனைவருக்கும் நன்றி. பாக்., ராணுவம், என் மகனை ஒப்படைக்க இருப்பதாக வந்துள்ள தகவல், மகிழ்ச்சி அளிக்கிறது; அவரை அழைத்து வர, வாகா செல்கிறேன் என்று அபினந்தன் தந்தை பேசினார்.