வெளிச்சத்திற்கு வருகிறது கருப்பு ஆடுகளின் சுவிஸ் உலகம்..!

வெளிச்சத்திற்கு வருகிறது கருப்பு ஆடுகளின் சுவிஸ் உலகம்..!

புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பான முதல் பட்டியலை அந்த நாட்டு அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து தங்கள் வங்கி கணக்கை முடித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

இவர்களது பணப் பரிமாற்றம், டிபாசிட், முதலீடு தொடர்பான எல்லா விபரங்களும் உள்ளன. இந்த விபரங்களை வைத்து கணக்கில் வராத சொத்துக்களை இவர்கள் வைத்துள்ளனரா என்பதை அறிய முடிவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் முடியும். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் தற்போது இந்தியாவில் வசிக்கவில்லை. தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், தென் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளிலும் இவர்கள் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.