வெளிநாடு செல்ல கார்த்திக் சிதம்பரத்திற்கு அனுமதி

வெளிநாடு செல்ல கார்த்திக் சிதம்பரத்திற்கு அனுமதி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மாக்ஸிஸ் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் நடைபெற உள்ள டென்னிஸ் போட்டிகள் தொடர்பாக சில மாதங்கள் வெளிநாடு செல்ல கார்த்திக் சிதம்பரம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதில் இன்று, கார்த்திக் சிதம்பரம் வெளிநாட்டு செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது உச்ச நீதிமன்றம். ரூ.10 கோடியை வைப்புத்தொகையாக கட்டிவிட்டு வெளிநாடு செல்லுமாறு கார்த்திக் சிதம்பரத்தை அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம்.மேலும் விசாரணைக்கு எப்போது வேண்டுமோ அப்போது ஆஜாராவதாக உத்திரவாதமும் தரவேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிபதிகள் கார்த்திக் சிதம்பரத்தை கடுமையாக கண்டித்தனர்."இதுவரை நீங்கள் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சட்டத்தோடு விளையாடாதீர்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போங்கள். ஆனால், வழக்கு விசாரணை சரியாக ஆஜராகி ஒத்துழையுங்கள்." என்று நீதிபதிகள் கூறினர். 

மார்ச் 5,6,7 மற்றும் 12 தேதிகளில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.