வெள்ளித்திரையில்  '2.0'ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

வெள்ளித்திரையில் '2.0'ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து சங்கர் இயக்கியுள்ள திரைப்படம் 2.0 இன்று வெளியானது. ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ளார். சுமார் 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 10000 திரையரங்குகளில் தமிழ் உட்பட 14 மொழிகளில் 2.0 இன்று வெளியாகிறது. எனினும், இணையத்தில் 2.0 வெளியாவதை தடுக்க 12,000 இணைய தளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கம் போல் ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த திரைப்பட வெளியீட்டையும் பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்க்கு பாலபிஷேகம் செய்தும் கோலாகலமாக கொண்டாடினர்.