வேண்டாத விருந்தாளி வைகோ

வேண்டாத விருந்தாளி வைகோ

"திமுகவிற்கு வைகோ வேண்டாத விருந்தாளியாக சென்று கொண்டிருக்கிறார்", என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.  கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்பு திமுகவை ஓரம் கட்டுவதாக சபதமெடுத்து மதிமுக வை தோற்றுவித்தவர் வைகோ. ஆனால், இப்போதோ எப்படியாவது திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால் திமுக தொண்டர்கள் மதிமுக தொண்டர்களை ஏளனமாகத்தான் பார்ப்பார்கள்", என்றும் கூறினார்.