வேதத்தை நோக்கி திரும்பும் கல்வி

வேதத்தை நோக்கி திரும்பும் கல்வி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் இணைந்து வேதிக் பல்கலைகழகத்தை தொடங்கவுள்ளன. இப்பல்கலைக்கழகம் குருகிராம் நகரில் 39 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. இங்கு வேத காலமுறைப்படி கல்வி கற்பிக்கப்படவுள்ளது.

அதற்காக சிலவகுப்புகள் மரத்தின் நிழலில் நடத்தப்பட இருக்கின்றன. இங்கு விவசாயம், கட்டடக்கலை, போர்க்கலை அரசியல் போன்றவை கற்பிக்கப்பட இருக்கின்றன.

இப்பல்கலைக்கழகத்திற்கு அசோக் சிங்கல் வேத் வித்யான் விஸ்வவித்யாலயா என பெயரிடப்பட்டுள்ளது. அசோக் சிங்கல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் ஆவார். இவர் ராமஜென்ம பூமி விவகாரத்தில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது