வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத அமைப்புகள்

வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத அமைப்புகள்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். "அரசு பணிகள் பாதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நன்னெறி விதிமுறைகளை மீறுவதாகும். எனவே, இன்று வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு விடுப்பு மற்றும் சம்பளம் அளிக்கப்பட மாட்டாது." என்று தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக தலைமை செயலக சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கம் மற்று அரசு அலுவலர் கழகம் ஆகிய அமைப்புகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளன.