"ஸ்டாலின் இன்னும் தேற வேண்டும்" - திமுக மூத்த தலைவர்கள் புலம்பல்

"ஸ்டாலின் இன்னும் தேற வேண்டும்" - திமுக மூத்த தலைவர்கள் புலம்பல்

ஸ்டாலின் இன்னும் தேற வேண்டும் - திமுக மூத்த தலைவர்கள் புலம்பல் 

அரசியலில் கூட்டணி கட்சிகளை சமாளிப்பது பெரிய கலை. கூட்டணியை உருவாக்குவது முதல், யாருக்கு எவ்வளவு இடம், எந்தந்த தொகுதிகள் என்று இறுதி செய்வதற்கு பெரிய சாதுர்யம் வேண்டும்.   கூட்டணியை உருவாக்க பொறுமை மிக அவசியம். நேரம், காலம் அறிந்து கூட்டணி அமைத்தால் மட்டுமே சரியாக இருக்கும். 

ஆனால் இது எதுவம் ஸ்டாலினிடம் இல்லை என்று கட்சியின்  மூத்த தலைவர்கள் புலம்புகிறார்கள்.  கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார் ஆகியோர் பொறுமையை கடைப்பிடித்தார்கள். கூட்டணிக்கு உடனே 'சரி' என்று சொல்லவே மாட்டார்கள்.   சிறிய கட்சிகள் கூட்டணி அமைக்க முற்பட்டால், அவர்களுக்கு எத்தனை இடம் என்று சொல்லிவிட்டு, உங்களுக்கு இஷ்டமிருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்கிற ரீதியில் பதிலளிப்பார்கள்.

பாமக வும் இறுதி தருணம் வரை யாருடன் கூட்டணி என்று அறிவிக்காது. சீட் பேரம் முடிந்த பிறகே சஸ்பென்ஸ் முடியும்.  விஜயகாந்த் கூட 2011ல் அதிமுகவுடன் கூட்டணி என்றும், 2014ல் பாஜக கூட்டணி என்றும் சஸ்பென்ஸ் வைத்தே முடிவு செய்தார்.  

ஆனால் ஸ்டாலின் வரிந்துக்கட்டிக்கொண்டு கலைஞர் சிலையை திறக்க சோனியாவை அழைத்தார். இதுவே கட்சியில் பலருக்கு அதிருப்தி. எத்தனையோ மூத்த அரசியல் தலைவர்கள் இருக்க, அரசியலில் மிகவும் ஜுனியர் சோனியாவை விழாவிற்கு மட்டும் அழைத்திருக்கலாம், சிலை திறப்பை அவர் செய்ததன் மூலம் கலைஞரின் புகழுக்கு குறைவு வந்துவிட்டதாக குறிப்பிடுகின்றனர்.  அதே மேடையில் ராகுல் அடுத்த பிரதமர் என்று கூறியது அடுத்த அபத்தம்.  தமிழ்நாட்டில் பெரிய கட்சி திமுக, ஆனால் காங்கிரஸிடம் சரண்டர் ஆகிற வேலைகளில் தலைமை ஈடுபடுவது பலருக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 சதவிகித ஒட்டு மட்டுமே உள்ள வைகோ, திருமா ஆகியோரை வலிய வந்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது, அவர்கள் கட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது, அவர்களை கூட்டணியில் இருக்க கெஞ்சுவது போல உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த சிறிய கட்சிகளுக்கு செக் வைக்கும் விதமாகவே "தோழமை கட்சிகள் வேறு, கூட்டணி கட்சிகள் வேறு" என்றும் "கூட்டணி உறுதியாகவில்லை, சில புது கட்சிகள் வரும், சில கட்சிகள் வெளியேறும்" என்ற ரீதியில் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்க பேட்டி அளிக்கிறார்கள். 

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால், மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அதற்கேற்றாற் போல செயல்பட்டிருக்கலாம், இப்போது இங்கு வெற்றி பெற்றும்,மத்தியில் பாஜக வந்துவிட்டால், பிறகு நமது கட்சிக்கு மதிப்பு போய்விடும், 2021 சட்டமன்ற தேர்தலில் பாதிக்கும் எனவும் புலம்புகிறார்கள்.