ஸ்டாலின் கேள்விக்கு பதில்

ஸ்டாலின் கேள்விக்கு பதில்

திருவாளர் ஸ்டாலின் 24.12.2018ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, மோடி அவர்கள் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியை கொள்கையில்லாத கூட்டணி என கூறியதை விமர்சனம் செய்து, மோடி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன.  அது கொள்கைக் கூட்டணியா அல்லது கொள்ளைக் கூட்டணியா என்பது தான் என் கேள்வி என எழுப்பியுள்ளார். வெறும் வாயை மெல்ல பச்சை கொடி காட்டியுள்ளார். தி.முக.வின் கொள்கையை பற்றிய விமர்சனமும், கொள்ளையடித்த பட்டியல்களும் இனி வலம் வரும். கூட்டணியே உருவாகாத சூழ்நிலையில் புதிதாக கேள்வி எழுப்புவது அரசியல் நாகரீகம் கிடையாது.  ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் , தி.மு.க. கூட்டணியை பற்றி மோடி எழுப்பிய கேள்வி சரியானது என்பதும், இந்த இருவரும் சேர்ந்த கூட்டணி, கொள்ளை கூட்டணி என்றால் மிகையாகாது. இரு கட்சிகளும் கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இருவரும் சேர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் அடித்த கொள்ளைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் யார் கொள்ளை கூட்டணி என்பது தெளிவாகும்.

தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள், கொள்ளையடித்த விவரங்களை சற்றே பார்ப்போம்.   மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்களிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம் என்ற கோஷத்தை முன் வைத்துள்ளார்.  இதே போலவே ஒரு கோஷத்தை கயமை, கயவாளித்தனம், கபளீகரம் என்று மாற்றி தி.மு.க. தில்லு முல்லுகளை வெட்ட வெளிச்சமாக்கலாம்.  சர்காரியாக கமிஷன் முன் விசாரணைக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், மேகலா பிக்சர்ஸ் ஊழல், அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், டிராக்டர் ஊழல், கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம், முரசொலி ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல், நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல், பூச்சி மருந்து தெளிப்பு ஊழல், மணி அரசி ஆலை கடன் ஊழல் , ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல், சமயநல்லூர் மின் திட்ட விற்பனை ஊழல், குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல், பிராட்வே டைம்ஸ் ஊழல், சர்க்கரை ஆலை ஊழல், கூட்டுறவு சங்க ஊழல், மது ஆலை ஊழல், கொடைக்கானல்  மற்றும் பழனி சாலை ஊழல், தி.மு.க. அறக்கட்டளை ஊழல், நில ஆக்கிரமிப்பு கொலை குற்றச்சாட்டு, போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசாரணையை கோரிய போது, இந்திரா காந்தி அரசால் நியமிக்கப்பட்டது சர்காரியா கமிஷன்

தங்களது கட்சி கொள்கைக்காக கூட்டணி அமைத்தாக கூறும் ஸ்டாலின்,  கட்சிக்கு நிதி கிடையாது என ஒப்பாரி வைத்த அண்ணாதுரைக்கு பின்னர் , தி.மு.க.வின் அசையா சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்பதை திருவாளர் ஸ்டாலின் மக்கள் முன் வைப்பாரா என்ற கேள்வி எழுகிறது.  சென்னை அண்ணா சாலையில் மிகப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் உண்மையான மதிப்பு என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டால், கட்டிட நிதி எங்கிருந்து வந்தது என்பது புலனாகும். கருணாநிதி உயிருடன் இருந்த போது, அவரது பிறந்த நாளுக்கு கோணிப்பையில் நிதி அளித்தாக அறிக்கை வெளிட்ட போது, உண்மையாகவே தொண்டன் தான் நிதி அளித்தானா என்ற கேள்வியும் எழுகிறது.  பிறந்த நாள் பரிசாக கோடிக்கணக்கில் நிதி எவ்வாறு சேர்ந்தது என்பதும் சிதம்பர ரகசியமாகும்.

1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.  ஒண்ணரை ஆண்டுகள் மட்டுமே அண்ணாதுரை முதல்வராக வீற்றிருந்தார்.  பின்னர் ஆட்சியை தவறான வழியில் கைப்பற்றிய கருணாநிதி, முதல்வராக வாழ்ந்த காலத்தில் இவரது சொத்து மதிப்பு எவ்வாறு உயர்ந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.  கருணாநிதியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களாக மாறிய வித்தை என்ன என்பது புலனாகாத புதிராகும். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முரசொலி மாறனின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை அலசி ஆராய்ந்தால், இநதிய திரு நாட்டில் இவ்வளவு சொத்துகள் சேர்த்த அரசியல்வாதிகளின் பட்டியலில் முதல் இடத்திலிருப்பவர் திருவாளர் கருணாநிதியை தவிர வேறு ஒருவரும் அருகில் வர இயலாது.

கருணாநிதியின் நெருங்கிய நண்பர் திரு ஜார்ஜ் பெர்ணாடஸை தலைவராக கொண்ட மாத இதழ் தி அதர் சைட் என்ற பத்திரிக்கையில் மூன்று பக்கத்திற்கு கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  சுமார் 69 சொத்து பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கனிமொழியின் சொத்துக்கள் அடக்கம் கிடையாது. இந்த பட்டியலில் பல சொத்துக்களின் மதிப்பீடுகளும் கிடையாது. 69 சொத்துக்களை பட்டியலிடுவதை காட்டிலும், சில சொத்துக்களை மட்டும் குறிப்பிடலாம்.  6124 ச.அடி கொண்ட கோபாலபுரத்தின் வீடு மதிப்பு ரூ5 கோடி, சி.ஐ.டி. காலனியில் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள வீட்டின் மதிப்பு ரூ12 கோடி, ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில்  ராஜாத்தியம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு ரூ10 கோடி, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு வேளச்சேரி வீட்டின் மதிப்பு ரூ2 கோடி, நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் மதிப்பு ரூ2 கோடி,

      முரசொலி மாறனின் கோபாலபுரத்தின் வீடு மதிப்பு ரூ5 கோடி, மாறனின் மகன்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை பார்த்தால் தலை சுற்றும், அவர்கள் எவ்வாறு கோடீஸ்வரராக மாறினார்கள் என்ற உண்மையை உலகுக்கு தெரியப்படுத்த ஸ்டாலின் தயாரா?   மாறன் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் மிகவும் நீளமானது.

தமிழக மக்களின் நலனுக்காகவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்றால், கருணாநிதி உயிருடன் இருந்த வரை நடந்த சில சம்பவங்களை திருவாளர் ஸ்டாலினுக்கு சுட்டிக் காட்ட வேண்டும்.  கொள்கையற்ற கூட்டணி என மோடியின் விமர்சனத்திற்கு, அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு பேச்சு வார்த்தை நடத்துவது கொள்ளையடிக்க கூட்டணியா என கேள்வி எழுப்பிய திருவாளர் ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடித்த சம்பவங்களை மறந்து விட்டு வாயாடியுள்ளார். வி.பி.சிங் ஆட்சியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருந்த போது தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித் தந்து நெருக்கமாக உறவு கொண்டதின் காரணமாக, புருனே சுல்தான் ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பாண்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார், மேற்படி பரிசை பயன்படுத்துவது தெரியாமல் இருந்த டாட்டியாவிடம், தனது நெருக்கத்தின் காரணமாக முரசொலி மாறன் பெற்று சன் டிவி தொடங்கப்பட்டது  இன்று சன்.டி.வியின் சாம்ராஜயம் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். திருவாளர் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை பெறுவதற்கு தயாளு அம்மையாருக்கு ரூ 600 கோடி கப்பம் கட்டியதும், அண்ணாசாலையில் உள்ள வோல்டாஸ் கட்டிடத்தை டாடாவிடம் பேரம் பேசி ராஜாத்தி அம்மையாருக்கு கொடுக்க தரகராக வேலை செய்ததும் கொள்கை கூட்டணியில் ஒரு ஷரத்தா?   மத்தியில் அமைச்சாராக பதவி ஏற்றவுடன், தயாநிதி மாறன் உருவாக்கிய சேனல்கள் பற்றி எப்பொழுதாவது ஸ்டாலின் வாய் திறந்து இருப்பாரா? நான்கு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சேனல்கள், பத்துக்கும் மேற்பட்ட 46 எப்.எம். ரேடியோ ஒலிபரப்புகள், இரண்டு தினசரிகள், சுமங்கலி கேபிள் விஷன், சன் டைரக்ட் டீ.டி.ஹெச். ஸ்பைஸ் ஜெட் என விமான போக்குவரத்து, அசியாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பமாகி விட்டது இதெல்லாம் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அடித்த கொள்ளை இல்லை என்று ஸ்டாலின் சொல்ல முடியுமா?

மாறன் குடும்பத்தாரின் சொத்து பட்டியலை சற்றே ஆய்வு செய்ய வேண்டும்.  சன்.டி.விக்கு எம்.ஆர்.சி நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு ரூ100 கோடி, மாறன் சகோதரர்களின் பெங்களுரு – மைசூர் சாலையில் உள்ள பண்ணை வீட்டின் மதிப்பு ரூ120 கோடி, கொட்டிவாக்கத்தில் உள்ள மாறனின் பண்ணை வீட்டின் மதிப்பு ரூ10 கோடி.  இவ்வாறு கோடியில் புரளும் மாறனின் மகன்கள் செய்த தொழில் என்ன என்பதை திருவாளர் ஸ்டாலின் பொது மக்கள் முன்பு விளக்குவாரா? என்ற கேள்விக்கு பதில் கூறி விட்டு மோடியை பற்றி விமர்சனம் செய்யட்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், கோ.சி.மணி, பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,  ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, ஆ.ராசா போன்றவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்பதற்கு உரிய விசாரணை கமிஷன் ஏற்படுத்தலாமா? சேது சமுத்திர திட்டத்தில் டி.ஆர்.பாலு அடித்த கொள்ளை என்ன என்பதை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயாரா?   திருவாளர் கருணாநிதி எப்படி பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும்.  அதன் விவரங்கள் கீழே

       லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு  2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் டிசம்பர் மாதம் 1ந் தேதி மிகப் பெரிய விளம்பரத்துடன் வெளியாகியுள்ளதுஇது ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும்அவர் வெளியிட்ட அறிக்கையில் தனது சொத்து பத்துக்களை விலாவாரியாக பட்டியிலிட்டு தான் தவறே செய்யாதவன், தனது உறவுக்காக கூட நான் தவறு செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்தமிழக முதல்வராகா அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் பல வழிகளில் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது.

     உண்மையிலேயே கருணாநிதி ஊழலுக்கு நெருப்பானவரா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும்திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியதுஒரு கட்சியின் மாநில பொருளாளரே தலைமையின் மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தியது திமுகவில் மட்டுமே நடந்தது.  6.11.1972ல் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர், கருணாநிதியின் மீதும் மற்றும் சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் மனு கொடுத்தார்கள்இந்த மனுவின் மீதுதான் 2.2.1976ந் தேதி முன்னாள் நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.

        சர்க்காரியா கமிஷனால் வன்மையாக கண்டிக்கப்பட்டவர் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. கமிஷனில் விசாரணைக்குட்பட்ட விஷயங்களில் முக்கியமானதுமுதல் மந்திரியின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அவருடைய குடும்பத்தினர் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்கி வந்தார்கள்”  என்பதாகும்இந்த குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக கமிஷன் கருத்து தெரிவித்தது.  “வீராணம் திட்டத்தைத் திருவாளர்கள் சத்திய நாராயணா பிரதர்சுக்கு ஒப்படைக்க எடுத்த முடிவு ஒரு பெரிய நிர்வாகத் தவறு என்பதைச் சந்தேகமில்லாமல் கூறலாம்என சர்க்காரியா தெரிவித்தார்தனது பதவிக் காலத்தில் தவறு செய்யாதவர் என்றும் ஊழலுக்கு தான் நெருப்பு என்பதும், மக்களை ஏமாற்றுகிற செயல்தான்மேலும் இவர் மீது போட்ட வழக்குகளை இந்திரா காந்தி தள்ளுபடி செய்த போது, கமிஷனில் பணியாற்றிய சிபிஐ. ஆதிகாரி திரு லட்சுமி நாராயணன் 2001ம் ஆண்டு மே மாதம் 29ந் தேதி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்கருணாநிதி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை வாபஸ் பெற்ற இந்திரா காந்தி அரசின் செயல் நியாயமற்றதுஎன்று கூறியதும் இவரின் நெருப்புக்கு சான்றாகும்.

     அனைத்து ஊடகங்களிலும் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி விடுத்த செய்தியில்என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை, அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டதும் இல்லை.”  என தெரிவித்துள்ளார்ஆனால் 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் அவர்தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும் சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்பதை தெரிவிக்க மறந்துவிட்டார்தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடலாகும்.

      அஞ்சுகம் பதிப்பகத்தில் ரூ5000க்கு 50 சதவீத பங்குகள் உள்ள நிறுவனத்திற்கு உரிமை பட்ட நிலம் மற்றும் கட்டிடம் உள்ளதுஇந்த நிறுவனத்தின் சொத்தில் இவருக்கு எவ்வித பங்கும் கிடையாதா? இந்த சொத்து இருக்கின்ற இடம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது, இன்று இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்பது பலருக்கும் தெரிந்த செய்தியாகும்இந்த நிறுவனத்தில் உள்ள மீதி பங்குகள் 50 சதவீதமும் தனது மனைவி மு..தயாளு அம்மாள் பேரில் உள்ளது என்பதையும் பார்த்தால் , கருணாநிதிக்கு அஞ்சுகம் பதிப்பத்தின் சொத்து முழுமையும் அவருடையது. இந்த சொத்தை ஏன் அறிக்கையில் தெரிவிக்கவில்லைஇதைப் போலவே தமிழ்க்கனி பதிப்பகம் எனும் பெயரில் உள்ள சொத்துக்கள் ராசாத்தி அம்மாளுக்கு உரிமைப்பட்டதையும் மறைத்துவிட்டார்.

     தனது பெயரில் வங்கியில் உள்ள வைப்புத் தொகையை மட்டும் கணக்கு காட்டி விட்டு தயாளு அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி கோடம்பாக்கத்தில் ரூ12,50,00,000(பணிரெண்டு கோடியே ஐம்பது லட்சம்) வைப்பு தொகை இருப்பதும்திருமதி ராசாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி இராசா அண்ணாமலைபுரம் கிளையில் உள்ள ரூ5,00,00,000 (ஐந்து கோடி) இருப்பதையும் தெரிவிக்கவில்லைகோபாலபுரத்தில் உள்ள வீட்டின் தன்மையை மட்டும் அந்தக் காலத்தில் ரூ45,000க்கு வாங்கினேன் என கூறிய . கருணாநிதி, ரூ3.02 கோடி மதிப்புள்ள திருமதி இராசாத்தி அம்மாளுக்கு சொந்தமான மயிலாப்பூர் சி..டி. காலனி வீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

     கருணாநிதி தனது மகனும் அப்போது மாநில துணை முதல்வருமான திரு.மு..ஸ்டாலின் சொத்துக்களை பற்றி மூச்சுக் கூட விடவில்லைமு..ஸ்டாலின் கணக்குப்படி தனது மனைவியின் பெயரில் சொத்தை விற்றதில் வரவேண்டிய தொகை ரூ14,50,000 என குறிப்பிட்டுள்ளதுஇவர் எந்த சொத்தை விற்றார் என்பது இமாலய ரகசியமாகும்வசதியுடன் வாழுகின்றவர்கள் எவரும் தங்களுடைய சொத்துக்களை விற்கமாட்டார்கள் என்பது நியதியாகும்திரு ஸ்டாலின் தற்போது வசிக்கும் சீதாபதி நகர் வேளச்சேரி உள்ள வீடு வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதை தெரிவிப்பார்களா அல்லது தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பட்ட மனுவில் தனது மகன் மீது உள்ள சொத்துக்களை ஏன் காட்டவில்லை என்பதையாவது சொல்வாரா?

       மதுரையில் ஆட்சிப் புரியும் கருணாநிதியின் மகன் மு..அழகிரியின் சொத்துக்கள் எவ்வளவு அவைகள் எவ்வாறு வந்தன என்பதற்கு பட்டி மன்றம் வைக்க ஸ்டாலின் தயரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்முதலில் மு..அழகரி மற்றும் மனைவி மகன் மீது வங்கியில் உள்ள வைப்புத்தொகையை பார்த்தால் மிகவும் மலைத்துவிடுவீர்கள்இந்தியன் வங்கி டிவிஎஸ் நகரில் முக.அழகரி தனது பெயரில் உள்ள வைப்பு தொகை ரூ1,75,00,000 இந்த தொகையுடன் மேலும் ரூ50 லட்சம் இணைத்துள்ளார்தனது மனைவியின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ10 லட்சமும், இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் ரூ43,43,095 உள்ளது, தனது மகன் பெயரில் இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் வைப்பு நிதியாக உள்ளது ரூ1,19,01,330 ஆகும்ஆகவே இவர்கள் மூவர் பெயரிலும் உள்ள வைப்புத் தொகை எவ்வாறு வந்தது என்பதை கருணாநிதி தெரிவித்திருந்தால் ஊழலுக்கு நெருப்பானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    மதுரையில் ஆட்சி புரிபவர் வாங்கியுள்ள நிலங்கள் இன்னும் அதிக அளவில் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாதுஉறவினருக்கு சொத்து சேர்க்க உதவில்லை என்று கூறிய கருணாநிதி சன் டிவி நெட்ஓர்க் என நிறுவனம் எவ்வாறு துவக்கப்பட்டு வளர்ந்ததுமுரசொலி மாறன் தொடாந்து எல்லா கால கட்டத்திலும் 1967 தொடங்கி தொடாந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் மத்தியில் அமைச்சராகவும்  பதவி வகித்த காரணத்தால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த நிறுவனம் வளர்ந்தது என்றால் அது மிகையாகாதுஅதாவது வி.பி.சிங் ஆட்சியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருந்த போது தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித் தந்து நெருக்கமாக உறவு கொண்டதின் காரணமாக, புருனே சுல்தான் ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பாண்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார், மேற்படி பரிசை பயன்படுத்துவது தெரியாமல் இருந்த டாட்டியாவிடம், தனது நெருக்கத்தின் காரணமாக முரசொலி மாறன் பெற்று சன் டிவி தொடங்கப்பட்டது.  2000ஆவது ஆண்டில் திமுக ஆட்சியிலிருக்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் துவக்கப்பட்டதுஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்கனவே இருந்து வந்த ஹாத்வே என்கின்ற வட இந்திய நிறுவனத்தின் 60 சதவீதம் பங்குகளை தட்டி பறித்த கதையும் உண்டு.

      தற்போது இந்த நிறுவனத்தில் கருணாநிதியின் பங்கு 20 சதவீதமாகும்ஆனால் சன் டிவியில் எனது பங்குக்காக ரூ100 கோடி கொடுக்கப்பட்டது என்று கூறிய கருணாநிதி சன் டிவியில் தனது பங்குக்காக கொடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லைதற்போது அதாவது இவருக்கு சன் டிவி பங்குகளை கொடுத்த போது நிறுவனத்தில் மொத்த மதிப்பு சுமார் ரூ16,000 கோடியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனஆகவே 20 சதவீத பங்குக்கு கிடைத்த தொகை ரூ 100 கோடி மட்டும்தானா என்பதை ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.

மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் அடித்த கொள்ளைகளை பற்றி அடுத்து விரிவாக அலசுவோம்.  காங்கிரஸ் அடித்த கொள்ளைகளை கண்டு கொள்ளாமல், அடித்துக் கொண்டிருந்த கொள்ளைகள் எவ்வளவு என்பதையும் பார்கக வேண்டும்.   

-ஈரோடு சரவணன்