ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம், கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று வெளியாகிறது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதால், இதன் காரணமாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செயல்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.