ஸ்டெர்லைட் விவகாரத்தில் அன்னியருக்கு என்ன அக்கறை?

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அன்னியருக்கு என்ன அக்கறை?

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் வன்முறையில் முடிந்து 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.  இது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை இயக்கலாம் என்று கூறியிருந்தது. பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் கோரியுள்ள  போதும் தமிழக அரசு ஆலைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து சுற்றுலா விசாவில் தூத்துக்குடி வந்த  மார்க் சியல்லா என்ற அமெரிக்க பயணி போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து தகவல்கள் திரட்டியுள்ளார். அவர்கள் பேச்சை வீடியோவும் எடுத்துள்ளார். இதனை அறிந்த தமிழக போலீஸார் அவரை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். 

அவர் விசா விதிமுறைகளை மீறியுள்ளதாக தமிழக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதே போல சமீபத்தில் சுற்றுலா விசாவில் அந்தமான் வந்த அமெரிக்கர்  ஒருவர் கட்டுப்பாடுகளை மீறி சென்னிதிலீஸ் தீவுகளுக்கு மத ப்ரசாரம் செய்ய சென்று அங்குள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.