ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மீண்டும் தாமரை மலர்ந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மீண்டும் தாமரை மலர்ந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் கோவிலின் உள் தாமரைமற்றும் சில பூக்களின் படங்கள் ஆங்காங்கே தாயார்பெருமாளை வரவேற்க வரையப்பட்டிருக்கின்றது.  நேற்று தாயார் சன்னிதிக்கு வந்த தேர்தல் அதிகாரி ஒருவர் தாயார் சன்னதிக்குள் வரையப்பட்டிருந்த தாமரைப்படங்கள் ஒரு கட்சியின் சின்னம் எனக்கூறி உடனே அந்த படங்களை அழிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். காவல் துறையினர் கோயிலில்  தாயாரை வரவேற்க வரையப்பட்ட அனைத்து தாமரை படங்களையும் அழித்தனர். இதை கண்டித்து பொதுமக்கள், ஹிந்து முன்னணி மற்றும் பல ஹிந்து அமைப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.  

இதைதொடர்ந்து  பொதுமக்கள், ஹிந்து முன்னணி போன்ற ஹிந்து அமைப்புகளின் கண்டனத்தால், தேர்தல் அதிகாரியின் உத்தரவால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அழிக்கபட்ட தாமரை கோலங்கள் மீண்டும் வரைய வைக்கபட்டுள்ளது.