ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா – திருச்சி 2019

ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா – திருச்சி 2019

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்களை பெருமைபடுத்தும் பொருட்டு ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா 17.06.2019 திருச்சி ஸ்ரீமதி

இந்திராகாந்தி கல்லூரியில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர் .ராமசுப்பு அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், தமிழக அரசியல் இதழ் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் திரிசக்தி சுந்தர்ராமன் ( எ ) கார்கோடன், தினசரி டாட் காம் இணைய இதழ் ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம், வளம் பத்திரிகை முதன்மை ஆசிரியர் ஹரன் பிரசன்னா ஆகியோருக்கு ‘சந்தேஷ் புரஷ்கார்’ விருது வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் பிரேமா நந்தகுமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

ஆர்எஸ்எஸ் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன் அவர்கள், திருச்சி கோட்ட தலைவர் செல்லதுரை அவர்களும் பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆர்எஸ்எஸ் தென் மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ண முத்துசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழக பொறுப்பாளர் ராம்நாத் நன்றி கூறினார்.