ஹிந்துக்களை அவமதிக்கும் காங்கிரஸ் - பிரதமர் நரேந்திர மோடி

ஹிந்துக்களை அவமதிக்கும் காங்கிரஸ் - பிரதமர் நரேந்திர மோடி

ஹிந்து பயங்கரவாதம் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதன் மூலம் ஹிந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதித்து வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனதை காங்கிரஸ் புண்படுத்துகிறது. 

ஹிந்துக்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக ஒரு சம்பவத்தை கூற முடியுமா? ஹிந்துக்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி, பெரும் பாவத்தை காங்கிரஸ் செய்துவிட்டது. அதற்கான தண்டனையை அளிக்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர். இது, காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவே தெரியும். எனவேதான், அந்த கட்சித் தலைவர்கள், ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் போட்டியிட அஞ்சுகின்றனர். 

ஹிந்துக்கள் குறைவாக உள்ள தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார் மோடி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்திலுள்ள தனது சொந்த தொகுதியான அமேதியில் மட்டுமன்றி, கேரள மாநிலம், வயநாடு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். வயநாடு, முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்ட தொகுதியாகும். எனவே, ராகுல் காந்தியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவரை மோடி விமர்சித்துள்ளார்.