ஹிந்துக்களை கொச்சைப்படுத்தும் போஸ்டர் - ஹன்சிகா மீது வழக்கு

ஹிந்துக்களை கொச்சைப்படுத்தும் போஸ்டர் - ஹன்சிகா மீது வழக்கு

நடிகை ஹன்சிகா கதை நாயகியாகவும், நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய பாத்திரத்திலும் நடிக்க அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள படம் 'மஹா'. இது ஹன்சிகாவின் 50வது படமாகும்.  இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஹன்சிகா காசி நகர் பின்னணியில்  காவியுடையும், உத்திராட்ச மாலையும் அணிந்து சுருட்டு பிடிப்பது போலவும், சாதுக்கள் அவர் காலடியில் இருப்பது போன்றும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களை கொச்சைப்படுத்துவதாக கூறி ஹன்சிகாவிற்கு எதிராக பா.ம.க வழக்கு தொடர்ந்துள்ளது.  இந்த வழக்கு நாளை வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

ஹிந்து முன்னணியும் இந்த போஸ்டரை எதிர்த்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.