ஹிந்துக்களை சீண்டும் தி.க அமைப்பினர்...!

ஹிந்துக்களை சீண்டும் தி.க அமைப்பினர்...!

சென்னையில் விநாயகர் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் அமைப்புகள் நூதன போராட்டம் நடத்தின. விநாயகர் சிலை ஊர்வலகத்திற்கு மாற்றாக, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புத்தர் ஊர்வலம் நடத்தப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தால் பல இடங்களில் அமைதி குலைவதாக குற்றம்சாட்டிய அவர்கள், புத்தர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றதோடு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இச்சம்பவத்திற்கு ஹிந்து மத ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு பிறமத விஷயங்களில் தலையிட தி.க அமைப்பினருக்கு தைரியம் உண்டா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்