ஹிந்து கடவுள்களை கொச்சைப்படுத்திய தி.மு.க., ஓட்டுக்கேட்டு வரவேண்டாம்

ஹிந்து கடவுள்களை கொச்சைப்படுத்திய தி.மு.க., ஓட்டுக்கேட்டு வரவேண்டாம்

ஹிந்து தெய்வங்களை, கலாசாரத்தை கொச்சைப்படுத்தியவர்கள் உடன் கூட்டணி வைத்தவர்கள் எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' எனும் வாசகம் அடங்கிய நோட்டீசை திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சியினர் வீடு, வீடாக ஒட்டினர்.

இந்நிலையில், 'நான் ஹிந்து' என்ற தலைப்பிட்ட நோட்டீசை திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி பகுதி வீடுகளில் ஒட்டும் பணியை அக்கட்சி மாநில அமைப்பு பொது செயலாளர் ரவிபாலன் தொடங்கினார். இதையடுத்து ''ஏற்கனவே அறிவித்தபடி நோட்டீஸ் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒய்.எம்.ஆர்.பட்டி, பழநி ரோடு செல்லாண்டி அம்மன் கோயில், பாறைப்பட்டி, ஆர்.வி.,நகர் பகுதிகளில் ஒட்ட உள்ளோம் என்று மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், நகர அமைப்பாளர் கண்ணன் மற்றும் அக்கட்சி மாநில அமைப்பு பொது செயலாளர் ரவிபாலன் கூறினர்.

இதுமட்டுமல்லாமல் வேடசந்துார், கொடைக்கானல், பழனி, வடமதுரை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடு மற்றும் வணிக வளாகங்களில் ஒட்ட உள்ளோம் என்றனர். 

இந்த நோட்டீஸ்-கள் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன்தான் ஒட்டப்படுகிறது. அனைத்து ஹிந்துக்களும் ஆதரவு தெரிவித்துஉள்ளனர், என்றார்.