ஹிந்து தலைவர்களை கொலை செய்ய முயற்சி - பஞ்சாபில் 5 இளைஞர்கள் கைது

ஹிந்து தலைவர்களை கொலை செய்ய முயற்சி - பஞ்சாபில் 5 இளைஞர்கள் கைது

ஹிந்து தலைவர்களையும், தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர்களையும் கொலை செய்ய திட்டமிட்ட 5 இளைஞர்களை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் பஞ்சாப்-ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 5 இளைஞர்களின் அடையாளம் தெரியவந்தது. ஹர்வீந்தர் சிங், சுல்தான் சிங், கரம்ஜீத் சிங், லவ்பிரீத் சிங், குருபிரீத் சிங் ஆகியன அவர்களின் பெயர்கள் ஆகும். சமூக வலைதளங்கள் வழியாக அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலிருந்து இவர்களை ஒருவர் வழி நடத்தியிருக்கிறார். சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த இளைஞர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். நிதிப் பரிமாற்றத்திலும் அவர்கள் தேர்ந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப் பயிற்சிக்காகவும் அவர்கள் திட்டமிட்டனர். பயங்கரவாதிகளுடன் அவர்கள் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் பஞ்சாப் காவல் துறை அதிகாரி கூறினார்.