ஹிந்து மதத்தை அவமதித்த ஊர்மிளா - போலீஸில் புகார்

ஹிந்து மதத்தை அவமதித்த ஊர்மிளா - போலீஸில் புகார்

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை வடக்கு லோக்சபா தொகுதியில், காங்., சார்பில் போட்டியிடும், பாலிவுட் நடிகை, ஊர்மிளா மதோந்த்கர், 45, மீது, ஹிந்து மதத்துக்கு எதிராக பேசியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், காங்., கட்சியில் இணைந்த ஊர்மிளாவுக்கு, வடக்கு மும்பை லோக்சபா தொகுதியில் போட்டியிட, காங்., மேலிடம், 'சீட்' வழங்கியது. இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஊர்மிளா, ஹிந்து மதத்துக்கு எதிராக பேசியதாக, பா.ஜ., சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த புகாரில் உலகிலேயே, ஹிந்து மதத்தில் தான் அதிக வன்முறை நடப்பதாக, மும்பையில் நடந்த பிரசாரத்தின் போது, ஊர்மிளா பேசியுள்ளார். மேலும், ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையிலும், சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.