'ஹிந்து விரோதிகள் வராதிர்கள்'

'ஹிந்து விரோதிகள் வராதிர்கள்'

'ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும், எந்த கட்சியும், ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், எச்சரிக்கை அட்டையை வீடுகளில் தொங்க விட்டுள்ளனர்.'பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு முன்னோடி, கிருஷ்ணர் தான்' என, தி.க., தலைவர் வீரமணி கொச்சைப்படுத்தி பேசியதற்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 'இது குறித்து, வீரமணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனில், தேர்தலில் தக்க பாடம் கற்பிப்போம்' என, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபாளையம், ஐ.என்.டி.யு.சி.,நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில், 'ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் எந்த கட்சியும், ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, எச்சரிக்கை அறிவிப்பு தொங்க விடப்பட்டுள்ளது.இந்த முறை தக்க பதில்ஒவ்வொரு முறையும், ஹிந்து மதத்தின் மீது இவர்கள் வீசி செல்லும் அமிலம் போன்ற வார்த்தைகளை கேட்டு சகிக்க முடியாமல் இருந்தோம். இந்த முறை தக்க பதில் அளிப்போம் விருதுநகர் மக்கள் தெரிவித்துள்ளனர்.