ஹிந்து விரோத காங்கிரஸ்

ஹிந்து விரோத காங்கிரஸ்

ராகுல் காந்தி ஏன் கேரளத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை அந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வெளிப்படையாக காமிரா முன்பு கூறுகிறார் (டைம்ஸ் நவ் டிவி).  "வயநாட்டில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து 54% இருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்தமாக ராகுலுக்கு வாக்களிப்பார்கள்.  அதோடு, பாப்புலர் ப்ஃரன்ட் ஆஃப் இந்தியா (PFI) வின் அரசியல் முகமான SDPI கட்சியும் காங்கிரஸை ஆதரிப்பதாக வாக்களித்துள்ளது" என்று நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.  இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான  PFI சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத் தக்கது. 

"இந்த முறை அமேதியில் ராகுல்ஜி வெல்வது மிகக் கடினம், அனேகமாக முடியாமலும் போகலாம். அதனால்  தான் இந்த பாதுகாப்பான தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறார்.  சோனியாஜி, பிரியங்காஜி, மன்மோகன் சிங் யாரும் வந்து பிரசாரம் கூட செய்யவேண்டாம். அவர் எளிதாக வென்று விடுவார்" என்கிறார் அவர். 

ஒட்டுமொத்த இந்தியாவில், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  இந்துக்களை விட அதிக எண்ணிக்கையில் இருக்கும் தொகுதி தான்  ராகுல் காந்திக்கு "பாதுகாப்பான தொகுதி" என்று காங்கிரஸ் கருதுகிறது. 

நீங்கள் ஒரு சுயமரியாதையுள்ள இந்து என்றால், உங்களது சமூகத்தின், மதத்தின், தேசத்தின் எதிர்காலம் பற்றிய அக்கறை உள்ள இந்து என்றால்,   நீங்கள் காங்கிரசிற்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ வாக்களிப்பீர்களா? யோசியுங்கள்.