ஹெலிகாப்டர் வழக்கு - முக்கிய நபர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

ஹெலிகாப்டர் வழக்கு - முக்கிய நபர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில், முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் அகஸ்தா வெஸ்ட்லாண்ட் வழக்கின் முக்கிய புள்ளிகளான ராஜீவ் சக்சேனா மற்றும் தீபக் தல்வார் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்தனர். இந்தியாவின் தூதரக ரீதியிலான தொடர் முயற்சியின் விளைவாக இவர்கள் இருவரையும் இந்தியாவிற்கு நாடு கடத்தியுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு. இந்த வழக்கின் இன்னொரு முக்கிய நபரான இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே நாடு கடத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜீவ் சக்சேனா மற்றும் தீபக் தல்வார் ஆகியோர் நாடு கடத்தப்பட்டிருப்பது ரூ.3,600 கோடி ஊழல் வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாகும்.