“காங்., - தி.மு.க.வின்  ஊழல்,குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” - பிரதமர் நரேந்திர மோடி

“காங்., - தி.மு.க.வின் ஊழல்,குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” - பிரதமர் நரேந்திர மோடி

.தி.மு.பா...கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரிபுரத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:

     அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், மைதானத்தில் வெப்பமும் அதிகம்: உங்கள் உற்சாகமும் அதிகம். உங்களை பார்க்கும் போது, ‘நாளை நமதே, நாற்பதும் நமதேஎன தோன்றுகிறது.

     ராணுவத்தினர் முதல் விவசாயிகள் வரை, ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு, கண்ணியம், வளத்தை கொண்டிருக்கிற புதிய இந்தியாவை உருவாக்க, நாம் கனவு காண்கிறோம். ஆனால் காங்.,-தி.மு.. கூட்டணியால், இந்த வளர்ச்சியை ஏற்று கொள்ள முடியவில்லை.

ஏற்று கொள்ளவில்லை

     கடந்த 1976ல், காங்கிரசால், தி.மு.., அவமானப்படுத்தப்பட்டது, இன்று, அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. ‘2ஜிஊழலில், தி.மு.., தலைவர்கள் சிறையில் இருந்தனர்.

     அப்போது காங்., தலைவர்களை விமர்சனம் செய்தனா். தற்போது, ஊழலுக்கு ஆதரவாக, மோடிக்கு எதிராக, ஒன்று சேர்ந்துள்ளனர்.

     சில நாட்களுக்கு முன், தி.மு.., தலைவர், ஸ்டாலின், தன் எஜமானை ராகுலை, பிரதமராக முன்மொழிந்தார். ஆனால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

     தி.மு.., - காங்., கூட்டணியில் உள்ள தலைவர்கள் கூட, அதை ஏற்கவில்லை. கூட்டணியில் அனைவரும், தாங்கள் தான் பிரதமர் என வரிசையில் காத்திருக்கின்றனர்.

     மத்திய ஆட்சியில், தந்தை நிதி அமைச்சராக இருந்தார். மகன், நாட்டை கொள்ளையடித்து கொண்டிருந்தார். தி.மு.., சிறுபிள்ளைத்தனமான காரியங்களை செய்து, மக்களை திசை திருப்புகிறது.

     ஆனால், உங்கள் காவலாளியான நான், உஷாராக உள்ளேன். அவர்கள் திருட்டுத்தனம் செய்தால், இந்த காவலாளியால் பிடிக்கப்படுவர். காங்., - தி.மு.. வாரிசு, குடும்ப, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

     அனைவருக்கும் நிதி, நியாயம் கிடைக்க வேண்டும் என, காங்., கட்சியினர் பேசுகின்றனர். 1984ல் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு யார் நியாயம் வழங்குவர் என, காங்கிரசை கேட்கிறேன்.

நடவடிக்கை

     எம்.ஜி.ஆர்., அரசை, ஒரு குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என, காங்., கலைத்ததே.. அதற்கு யார் நியாயம் வழங்குவர் என காங்கிரசை கேட்கிறேன்.

     இந்த பகுதி விவசாயிகளின், நீர்ப்பாசன பிரச்னை குறித்து, நன்றாக தெரியும், கங்கை போல வைகையை சீர்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

     இந்த மாவட்டம் வழியாக, சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரைவாக சென்று, தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

     அப்துல் கலாம், கனவுகளை நனவாக்கி, இந்தியாவை புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும். ‘மிஷன் சக்திமூலம் செயற்கைக் கோளை நாம் தாக்கி அழித்த செயலை, அப்துல் கலாம் இருந்திருந்தால், கண்டு மகிழ்ந்திருப்பார்.

     இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, மருத்துவ காப்பீடு இல்லை.

     ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், 50 கோடி பேருக்கு, மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு, உயர் தர சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, 130 கோடி மக்களின் ஆசியால் நடந்தது.

     பாம்பனில், 100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம், சிறப்பு மிக்க பாலமாக மாற்றப்பட உள்ளது. மே 23ல் மீண்டும் பொறுப்புக்கு வரும் மோடி அரசு, ‘ஜல் சக்தி திட்டம்மூலம் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும்.

பதிலடி கொடுப்போம்

     காங்., - தி.மு.முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு, நாட்டைப் பற்றி தொலைநோக்கு பார்வை இல்லைஅது கலப்பட கூட்டணி.

     மோடியின் மீது வெறுப்புடன் இருக்கின்றனர். மோடியை வெறுப்பதாக, நாட்டையே வெறுத்துக் கொண்டிருக்கின்றனர்.

     இந்த நாட்டை பாதுகாக்க முடியாதவர்களால், நாட்டை முன்னேற்ற முடியாது. காங்., ஆட்சியில் பயங்கரவாத செயல்கள் நடந்த போது, அமைதியாக இருந்தனர்.

     காலம் மாறிவிட்டது, ஜிகாதி பயங்கரவாதிகள் தாக்கினால், அவர்களை தேடி, தக்க பதிலடி கொடுப்போம்.

     நாம், இந்தியர் பண்பாடுகளை மதிப்போம்; பெண்களுக்கு மதிப்பளிப்போம். முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இருந்த, முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்பட்டது.

     நமக்கு நாடு தான் முதன்மை; அவர்களுக்கு குடும்பம் தான் முக்கியம். அந்த ஒரு குடும்பத்தினர் மட்டுமே இருக்க வேண்டும் என, செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில், வடக்குதெற்கு என்ற வேற்றுமையை உருவாக்கினர்.

     காங்., - தி.மு.., - முஸ்லிம் லீக் கூட்டணிக்கு ஓட்டு போடுவது, பயங்கரவாதத்திற்கு துணை போவதற்கு சமம்.

     இவ்வாறு அவர் பேசினார்.