“மிஷன் சக்தி” சோதனை வெற்றி.. பாரத பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி

“மிஷன் சக்தி” சோதனை வெற்றி.. பாரத பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி

இந்திய விண்வெளி துறையில் இன்று இந்தியா மற்றொரு மைல்கல்லை தொட்டுள்ளது. தாழ்ந்த புவி சுற்றுவட்டப் பாதை(எல்இஒ)-யில் 300 கி.மீ தொலைவில் சுற்றிய செயற்கைக்கோளை தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மூலமாக (ASAT) மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா .இதுபோன்ற ஏவுகணை என்பது, காலக்கெடு முடிந்துபோன அல்லது செயல்படாத செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுவதாகும் .நிறைய நாடுகள் இந்த வசதி தங்களிடம் இருப்பதாக சொல்லிக் கொண்டாலும், இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, வெளிப்படையாக இந்த சோதனையை நடத்தி வெற்றி பெற்றன. இந்த வரிசையில் தற்போது 4வது நாடாக இந்தியா சாதித்துள்ளது. இந்த சோதனைக்கு மிஷன் சக்தி என்று பாரதம் பெயர் சூட்டியுள்ளது.

ஏசாட் வகை ஏவுகணையை அமெரிக்கா 1958லும், சோவியத் யூனியன் 1964லும் இந்த சோதனையை நடத்தின .நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2007ல் சீனா இந்த சாதனையை செய்த நிலையில், 2019ல் இந்திய பாதுகாப்புத்துறையும், இந்த அறிவியல் முன்னோடிகள் அணியில் இந்தியா சேர்ந்துள்ளது. இது குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தேச மக்களுக்கும் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் துறையினருக்கும் மார்ச் 27அன்று சிறப்பு தொலைக்காட்சி உரையில் பாராட்டுத் தெரிவித்தார்.

இது உள்நாட்டு பாதுகாப்புக்காக மட்டுமே தவிர, பிற நாட்டு விண்வெளியிலோ, அவர்கள் செயற்கைக்கோள்களை அழிக்கவோ இதை பயன்படுத்தப்போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உரையின் இறுதிப்பகுதியில், இதை அடிக்கோடிட்டுச் சொன்னார்.