1 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 புதிய திட்டத்தை துவக்கினார் மோடி

1 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 புதிய திட்டத்தை துவக்கினார் மோடி

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான, உதவித் தொகை திட்டத்தை, உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முதல் தவணையாக, தலா, 2,000 ரூபாய், ஒரு கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'நாடு முழுவதும் உள்ள, 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இது, மூன்று தவணைகளில் வழங்கப்படும்' என, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை, பிரதமர் துவக்கி வைத்த சில நிமிடங்களில், தேனியில் உள்ள, விவசாயியின் வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளது. இத்திட்டத்தில், தமிழக விவசாயிகள் பயனடையும் வகையில், 277 கோடி ரூபாய் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ., நடத்திய சட்ட போராட்டத்தால், காவிரி நீரை பெறும் வகை யில், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி முறைப்படுத்தும் குழு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகளுக்கான, உதவித் தொகை திட்டம் பற்றி, பா.ஜ., விவசாயிகள் பிரிவுத் தலைவரும், எம்.பி.,யுமான, வீரேந்திர சிங் மஸ்த் கூறிய தாவது:விவசாயிகளுக்கான உதவித் தொகை திட்டம், லோக்சபா தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டுள்ளதாக, சிலர் விமர்சிக்கின்றனர். இது ஒரு தொடர் திட்டம்; தேர்தலுக்கானது என, அரசியல் சாயம் பூசுவது தவறு.