10வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2019

10வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி - 2019

10 வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் 30.01.2019 முதல் 04.02.2019 வரை 6 நாட்கள் நடைபெறும்.  இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 வரை செயல்படும். இந்த ஆறு நாட்களிலும் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  நாளை மாலை 5 மணிக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். 

கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இல்லை என்பதோடு கிண்டி, வேளச்சேரி ரயில் நிலையம், கிண்டி ரேஸ்கோர்ஸ், காமாட்சி மருத்துவமனை சைதாப்பேட்டை, தரமணி ஜன்ஷன் உள்ளிட்ட இடங்களிலிருந்து கண்காட்சி நடக்குமிடத்திற்கு இலவசமாக போக்குவரத்து வசதியும் செய்யப்பட உள்ளது.