10% இடஒதுக்கீடால் யாருக்கும் பாதிப்பில்லை

10% இடஒதுக்கீடால் யாருக்கும் பாதிப்பில்லை

பொதுப்பிரிவினரில் உள்ள ஏழைகளும் பயன் பெற வேண்டும் என்று தான் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் இதனால், ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  நேற்று காணொளி காட்சி வாயிலாக மஹாராஷ்டிரத்தில் உள்ள பாரமதி மற்றும் கச்சிரோலி பகுதி பாஜக வாக்குசாவடி நிலை ஊழியர்களுடன் அவர் உரையாடினார். அப்போது இந்த தகவலை அவர் தெரிவித்தார். 

மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளில்  நாட்டில் மாவோயிஸ்ட் மற்றும் இடது சாரி பயங்கரவாதத்தின் நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், இடது சாரி தீவிரவாதத்தால்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை  126ல் இருந்து 90 ஆக குறைந்துள்ளது என்றும் கூறிய அவர் நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் பாஜக தான் ஜனநாயக பூர்வமாக முடிவுகள் எடுக்கிறது என்றும் கூறினார்.